Wednesday, February 17, 2010

நிறையழிதல்...

விழுதுகளிறக்கிய
ஆலமரத்தின் கதகதப்பில்
கூடியிருந்த கூட்டுப் புழுவொன்று
வண்ணத்துப் பூச்சியாகி
வனமேகியது
அதன்
பிரிவின் ஆற்றாமையில்
இடறிய ஆலமரம்
மீண்டும்
விதைக்குள் விழுந்தது.

.

48 comments:

  1. இரண்டு கவிதையும் நல்லா இருக்கு...இரண்டாவது ஒரு படி மேலே..

    ReplyDelete
  2. கமல் முதல் கவிதை ரெம்ப அருமைங்க . ரெண்டாவது என் மரமண்டைக்கு ஏறல

    ReplyDelete
  3. kavithai arumai. naanraaka vanthullathu kadavul lukku nanri.

    ReplyDelete
  4. முதல் முத்து என்றால் இரண்டாவது வைரவரிகள்...!

    ReplyDelete
  5. எத்தனையோ பெண்களை நாம் பார்த்தாலும்
    காதலியின் கடைகண் பார்வையில் சறியும் ஆண்களை போல

    எத்தனையோ வண்ணத்துபூச்சிக்கு உறைவிடம் தந்தவனே
    அந்த ஒர்வண்ணத்துபூச்சியும் உன்னை செய்யத மாயமோ?

    ReplyDelete
  6. இந்தியாவின் வழி அஹிம்சை.
    தீவிரவாத்தின் பிடியில் இந்தியாவை போன்று இரண்டாவது கவிதை...


    இவன்,
    தஞ்சை.வாசன்.

    ReplyDelete
  7. அய்யோ !!!
    குரங்கின் கையில் -
    கடவுள்


    ...........மக்கள், இதையும் பாத்து பழகிட்டாங்க........கவிதை நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  8. நல்ல கவிதைக்கான அடையாளங்களில் ஒன்று அதிலிருந்து ஒரு சொல்லை எடுத்துவிடவோ அல்லது ஒரு புதிய சொல்லை சேர்த்து விடவோ முடியாது. "நிறையழிதல்..." அப்படியிருக்கிறது.தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. ரெண்டுமே அருமை கமலேஷ் முதலாவது மனசைத்தொட்டது இரண்டாவது மூளையைத்தொட்டது

    ReplyDelete
  10. ஆலமரத்தின் வேதனை... பிரிந்து போன வண்ணத்துப்பூச்சி. மனதை தொட்ட கவிதை.
    கடவுள், குழந்தை, குரங்கு... நிதர்சனத்தின் வெளிப்பாடு.

    ReplyDelete
  11. //சுயம் தேடும் பறவை//

    உங்களோட அடையாளமே வித்தியாசமா இருக்கு. இதுதான் முதல்முறை உங்க தளத்திற்கு வருகை புரிவது. இனிமேல் தொடர்ந்து படிக்கிறேன்.

    ReplyDelete
  12. மிகவும் பிடித்திருக்கிறது நண்பா !
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. நிறையழிதல் :))))
    2வது மிகவும் நல்லா இருக்கு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. க‌விதைக‌ள் ந‌ல்லா இருக்கு

    ReplyDelete
  15. ஆலமரம், ஆல விருட்சமாய் நிற்கிறது, அருமை.

    ReplyDelete
  16. கவிதைகள் நல்லா இருக்குங்க..

    ReplyDelete
  17. அதன்
    பிரிவின் ஆற்றாமையில்
    இடறிய ஆலமரம்
    மீண்டும்
    விதைக்குள்ளே விழுந்தது.
    //////

    கலக்கலான வரிகள்

    ReplyDelete
  18. இரண்டு கவிதையும் நல்லா இருக்கு...கலக்கல் கமல்...வாழ்த்துகள்...

    ReplyDelete
  19. @ நாடோடி : உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே.

    @ மீன்துள்ளியான் : நேரமிருந்தால் இன்னுமொருமுறை கொஞ்சம் உற்றுப் பாருங்களேன்.புரிந்து விடும்.உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே.

    @ மதுரை சரவணன் : நன்றி தோழரே.

    @ சே.குமார் : மிக்க நன்றி தோழரே.

    @ தஞ்சை ஸ்ரீ.வாசன் : உங்களின் முதல் வருகைக்கும், கருத்திருக்கும் மிக்க நன்றி நண்பரே.

    @ சித்ரா : மிக்க நன்றி தோழி.

    @ ரிஷபன் : மிக்க நன்றி நண்பரே.

    @ ஜெயமார்த்தாண்டன்: இரண்டு வரியில நீங்க சொல்லிருக்ற விஷயம் மிக மிக அற்புதமானது.நல்ல கவிதை எப்படி இருக்கணும்னு இனிமே என்கிட்ட யாரவது கேட்டா நிச்சயமா உங்களோட வரிகளைத்தான் நான் சொல்லுவேன். உங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி தோழரே..

    @ தேனம்மை: உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி தோழி.

    @ அகல்விளக்கு : உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.

    @ vidoosh : மிக்க நன்றி

    @தமிழ்உதயம் : மிக மிக நன்றி.

    @கவிதை காதலன்: உங்களின் முதல் வருகைக்கு மிக நன்றி.

    @ ரமேஷ் : மிக நன்றி தோழரே..

    @ உயிரோடை: மிக்க நன்றி தோழி.

    @மல்லிகா : உங்களின் பதிவுகளை படித்தேன் தோழி. நல்ல அங்கீகாரம் உங்களுக்கு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள் .உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி தோழி.

    @புபடியான்: கருத்திற்கு மிக்க நன்றி தோழி.

    @ பிரபு:உங்களை முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.தோழரே.

    @ சீமாங்கனி : வாருங்கள் தோழரே..கருத்திற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  20. @ சைவகொத்து: உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே.

    @ஜெனோவா : மிக்க நன்றி நண்பரே..

    ReplyDelete
  21. இரண்டு கவிதைகளுமே அருமை.இரண்டாவது சிரிக்கவும் சிந்திக்கவுமாயிருக்கு !

    ReplyDelete
  22. கவி..தை...?க..விதை....கதை.முதல் வணக்கம்.

    ReplyDelete
  23. எல்லாமே ரசிக்கத்தக்க தாக இருக்கிறது,தொடர்வோம்..

    ReplyDelete
  24. அதன்
    பிரிவின் ஆற்றாமையில்
    இடறிய ஆலமரம்
    மீண்டும்
    விதைக்குள் விழுந்தது

    இது நல்லாயிருக்குங்க..

    2வது கவிதை உண்மை

    ReplyDelete
  25. இரண்டு கவிதைகளும் அருமை.

    ReplyDelete
  26. கவிதை 1 கதகதப்பு
    கவிதை 2 வெப்பம்.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  27. இந்த ஐவரையுமே படித்து இருக்கிறேன் ஜெரி நல்ல பகிர்வு அஷோக்கின் மீன் குழம்பு கவிதையும் இட்லி கவிதையும் படித்துப் பாருங்கள் மயங்கி விடுவீர்கள்
    துபாய் ராஜாவின் என்னவளே பாலகுமாரின் உரையாடல் போட்டிக்கான அப்பா கவிதை கமலேஷின் இலக்கணக் கனவு கருணாரசுவை இப்பதான் படிக்கிறேன் அவருடைய செல்லமே இந்த ஐந்தும் நான் விருப்பிப் படித்தவை ஜெரி ரொம்ப நன்றி என் சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் நிஜமாவே சிங்கங்கள்தான் congrats Kamalesh

    ReplyDelete
  28. Kamalesh plz go and read the blog VALAICHARAM..that is

    http://blogintamil.blogspot.com/

    u will understand...

    ReplyDelete
  29. @ ஹேமா: மிக்க நன்றி தோழி

    @ தராபுரதான் : உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

    @ ஜெரி ஈசானந்தன்: உங்களின் ஊக்கதிருக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

    @தமிழரசி : மிக்க நன்றி தோழி

    @மாதவி : மிக்க நன்றி தோழி

    @கருணாகரசு: மிக்க நன்றி தோழரே.

    @ தேனம்மை : உங்களின் தகவலுக்கும் வாழ்த்துக்களுக்கும், மிக மிக நன்றி தோழி

    ReplyDelete
  30. இரண்டு கவிதையும் அருமை நண்பா...வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. கவிதை அருமை நண்பா...வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. தோழரே!

    பதின்ம பருவ நிகழ்வுகளை பதியும் தொடர்ப்திவுக்கு தாங்களை அழைக்கிறேன். அழைப்பினை ஏற்று தொடர் பதிவெழுத வேண்டுகிறேன்!

    நட்புடன்
    கயல்

    ReplyDelete
  34. //தேடிகிட்டே இருக்குதாம் அந்த அப்பா குருவி. //

    இரண்டாம் கரு உயிர்ப்பு மிக்கது.

    ReplyDelete
  35. என்ன கமலேஷ் நம்ம பக்கமும் ஆளாக்காணோம்... உங்கள் பக்கமும் பதிவைக்காணோம் என்னாச்சு..?

    ReplyDelete
  36. என்ன கமலேஷ் நம்ம பக்கமும் ஆளாக்காணோம்... உங்கள் பக்கமும் பதிவைக்காணோம் என்னாச்சு..?

    ReplyDelete
  37. எனது மனசு தளத்தில் உங்கள் பற்றி எனது மனசின் பிரதிபலிப்பு.

    படிக்க இதை கிளிக்கவும். http://vayalaan.blogspot.com/2010/03/blog-post_19.html


    மனதில் உள்ளதை பின்னூட்டமாகவும் மனதை ஓட்டுக்களாகவும் அளிக்க மறக்காதீர்கள்.

    நட்புடன்,

    சே.குமார்.

    ReplyDelete
  38. ஏன் அடுத பதிவு போடலை கமலேஷ்..

    ReplyDelete
  39. //அதன்
    பிரிவின் ஆற்றாமையில்
    இடறிய ஆலமரம்
    மீண்டும்
    விதைக்குள் விழுந்தது.//

    simply awesome kamalesh!

    ReplyDelete
  40. நறுக்கான கவிதை..!!!!!!!

    ReplyDelete
  41. நல்லா இருக்கு கமலேஷ். ஆனால், நிறைய பேர் சொல்வது போல், இது இரண்டு கவிதைகளா?

    அனுஜன்யா

    ReplyDelete
  42. விழுதுகளிறக்கிய
    ஆலமரத்தின் கதகதப்பில்...

    என்ன ஒரு அழகிய கவிதை!

    -கே.பி.ஜனா

    ReplyDelete
  43. நிறையழிதல் அருமை !

    ReplyDelete