Friday, December 4, 2009

தாவர உண்ணி....


கொலைகள் வெகு சுலபம்தான்
வலியென்ற வாய் இல்லா விடில்...

கழுத்தறுபடும் ஆட்டின் வலியை
உணர்வதேயில்லை
மிதிபடும் செடிகளில் எப்போதும்...

வேலங்குச்சியில் பல் துலக்க
பல நேரம் முறித்து விடுகிறோம்
மரத்தின் விரல்களை...

கொஞ்சம் உற்று பாருங்கள்....

உங்கள் கூந்தலை அலங்கரிப்பது
ஒரு தாவரத்தின் கண்களாய் இருக்கலாம்...

நீங்கள் பிடுங்கி நட்ட நாற்றில்
ஒரு புணர்ச்சி பிரிந்திருக்கலாம்..

இதோ
பசு மரத்தில் அடிக்கப்பட்ட ஆணி -
இன்னுமொரு இயேசு அறையப் பட்டிருக்கலாம்....

கொலைகள் வெகு சுலபம்தான்
வலியென்ற வாய் இல்லா விடில்..

விழாவுக்கென வெட்டப்பட்ட குலைவாழை
மடிந்திருக்கிறாள்
பூப்பெய்திய பெண் ஒருத்தி....

செரிக்கப்படும் விதைகளோடு
முடிந்து போகிறது
சில கோடி தலைமுறைகள்...

குழந்தை கிள்ளிய இலையின் காம்பில்
வழிகிறது ஒரு யாக்கையின் இரத்தம்...

நீங்கள் இறுக்கி கட்டிய கொடி கம்பி
நெருக்குகிறது ஒரு உயிரின் சுவாசம்...

உண்மையில் கொலைகள் வெகு சுலபம்தான்
வலியென்ற வாய் இல்லா விடில்...


- கமலேஷ்.கி -

குறிப்பு : (இது ‘உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது).



48 comments:

Vidhoosh said...

அய்யோ. அசந்து போயிட்டேன். திரும்பி படிக்கிறேன். மீண்டும் மீண்டும்.
--வித்யா

பூங்குன்றன்.வே said...

வெரி குட்..நல்ல கருவும்,கவிதையும்.. வாழ்த்துக்கள்.

கமலேஷ் said...

நன்றி வித்யா மற்றும் பூங்குன்றன்...

கா.பழனியப்பன் said...

முற்றிலும் வித்தியாசமான பார்வை.

சில காவிதைள் படித்தவுடன் மனதிலேயே நின்று விடும்,
சில நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் தூண்டும்.உங்களின் இந்த‌ கவிதை
இரண்டாம் வகை.தொடர்ந்து எதிர்பார்கிறேன் இன்னும் பல உங்களிடம் இருந்து.

நன்றி !

அகல்விளக்கு said...

மீண்டும் மைல்கல்லைப்போன்றதொரு கவிதை நண்பா....

வாழ்த்துக்கள்...

Paleo God said...

அழகாயிருக்குது கமலேஷ்... எனக்குள் பல கதவுகள் திறந்த கவிதை இது... என் வலைதளம் வந்து ரசித்ததிற்கு நன்றி.. மொத்த மனித ஆறறிவு அடாவடிகளையும் மயிலிறகில் பெருக்கிவிட்டீர்களே...!!

விநாயக முருகன் said...

நீங்கள் பிடுங்கி நட்ட நாற்றில்
ஒரு புணர்ச்சி பிரிந்திருக்கலாம்..

இதோ
பசு மரத்தில் அடிக்கப்பட்ட ஆணி -
இன்னுமொரு இயேசு அறையப் பட்டிருக்கலாம்....

அசந்து போயிட்டேன்.வாழ்த்துக்கள்

ரிஷபன் said...

செரிக்கப்படும் விதைகளோடு
முடிந்து போகிறது
சில கோடி தலைமுறைகள்
ஒவ்வொரு வரியிலும் பிரமிக்க வைக்கும் யதார்த்த படப் பிடிப்பு.. நல்லா இருக்குங்க கமலேஷ்

விஜய் said...

அட்டகாசமா இருக்கு வலியுடன்

பரிசு பெற நெஞ்சார்ந்து வாழ்த்துகிறேன்

விஜய்

கலகலப்ரியா said...

அட அட... அருமை கமலேஷ்..! வெற்றிபெற வாழ்த்துகள்..!

jothi said...

பதிவுலகில் உங்களைப் போல நல்ல கவிஞர் குறைவுதான். தொடர்ந்து எழுதுங்கள்.

ஹேமா said...

கமலேஸ் நல்ல கருவும் சிந்தனையும்.நிச்சயம் பரிசு உண்டு.

நீங்க என்னதான் சொன்னாலும் வாழ்வு ஒரு சங்கிலிப் பிணைப்பில்தான்.ஒன்றில் ஒன்று தங்கிய வாழ்வுதானே இனிக்கிறது.

சத்ரியன் said...

//கொலைகள் வெகு சுலபம்தான்
வலியென்ற வாய் இல்லா விடில்...//

கமலேஷ்,

உண்மையில்.....!

கருத்தாழமிக்க அழகுக் கவிதை.

Unknown said...

நண்பா நீ செதுக்கும் சிலைகளை
காண கண் இல்லாமல் தவித்த இக்குருடனுக்கு
எண் சிலைகளுக்கும் வாய் உண்டு
எண் சிலைகளுக்கும் சொல் உண்டு
என நிருபித்திருக்கிறாய் இக் கவிதையின் வரிகளில்
(அந்த புல்பாயில் குறிப்பில் வரவில்லையே ஏன் நண்பா)

S.A. நவாஸுதீன் said...

வாவ். அருமை அருமை

வெற்றி பெற வாழ்த்துக்கள்

swizram said...

//நீங்கள் இறுக்கி கட்டிய கொடி கம்பி
நெருக்குகிறது ஒரு உயிரின் சுவாசம்...//

ரொம்ப அழகா யோசிக்குறீங்க...

//
(சரி விடுங்க...
கருகலைப்பு சட்டப்படி தவறுதான்..
ஆனா அவிச்ச முட்டையும் ,
ஆம்ப்ளேட்டும் கணக்கில் வராது....)
//

இவ்ளோ அழகா கவிதை எழுதி அத கடைசி வரி ல கமர்சியல் ஆக்கனுமா??

முகமூடியணிந்த பேனா!! said...

மிகவும் பிடித்திருக்கிறது எளிமையான வரிகளில் வலிமையான வீச்சு!

ப்ரியமுடன் வசந்த் said...

கமர்ஷியல் கவிதைகளுக்கிடையில்

ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு அசத்தல் கவிதை

வாழ்த்துக்கள் நண்பா ஜெயிப்பீங்க..

Thenammai Lakshmanan said...

//உங்கள் கூந்தலை அலங்கரிப்பது
ஒரு தாவரத்தின் கண்களாய் இருக்கலாம்...//

அருமை கமலேஷ்

பூ வைக்க கூட யோசிக்கணும்னு நினைக்கிறேன்

வெற்றி பெற வாழ்த்துக்கள்

தமிழ் said...

அற்புத‌ம் ந‌ண்ப‌ரே

ஒரு அருமையான கவிதையை என் வாழ்நாளில் வாசித்த உணர்வு

வ‌லியை உண‌ர‌ வைக்கும் வ‌ரிக‌ள்

வாழ்த்துக‌ள்

அறிவு GV said...

ஆஹா, கமலேஷ். பிச்சு உதறிட்டீங்க. எந்த வரி பெஸ்ட்னு யோசிக்க கூட முடியல. பரிசு நிச்சயம். வாழ்த்துக்கள்.

ஜெனோவா said...

//நீங்கள் பிடுங்கி நட்ட நாற்றில்
ஒரு புணர்ச்சி பிரிந்திருக்கலாம்..//

தொடர்ந்து வாசிக்க ஆசைப்பட்டாலும் , இந்த வரிகளிலேயே நிற்கிறது மனது !
மிக அழகாக செதுக்கப்பட்ட வரிகள் நண்பா !

வெற்றி பெற என் வாழ்த்துக்கள் !

'பரிவை' சே.குமார் said...

Nanru Nanbarey...

ரொம்ப அழகா யோசிக்குறீங்க...

வெற்றி பெற என் வாழ்த்துக்கள் !

அன்புடன் மலிக்கா said...

வரிகளுக்குள் எத்தனை உயிர்களின் வாழ்க்கை அடங்கியிருக்கிறது.. வெற்றிபெற வாழ்த்துக்கள்

swizram said...

கமெர்சியல் வரிகள தூக்கிட்டீங்க போல....??!!
நல்லாருக்கு கமலேஷ்....!!!

Chitra said...

இந்த nature dependancy இல்லைனா மனித இனம் அழிந்து விடுமோ? உங்கள் கவிதை நிறைய விஷயங்களை பற்றி சிந்திக்க தூண்டுகிறது. கவிதை கருவின் ஆழம் நல்லா இருக்கு. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

கமலேஷ் said...

என்னை இந்த அளவுக்கு ஊக்குவிக்கும் தோழமை அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி,
தோழி ராசிக்கு சீமாட்டி என் தவறுகளை சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி...(அவிச்ச முட்டை இனி என்னைக்கும் இருக்காது தோழி)

Keddavan said...

அருமையான கவிதை உங்களிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கின்றேன்..

யாத்ரா said...

கவிதை ரொம்பப் பிடிச்சிருக்கு கமலேஷ், வாழ்த்துகள்.

நேசமித்ரன் said...

உண்ணி ?

உன்னி ?

எது சரி கமலேஷ் ?

சீமான்கனி said...

//நீங்கள் இறுக்கி கட்டிய கொடி கம்பி
நெருக்குகிறது ஒரு உயிரின் சுவாசம்...

உண்மையில் கொலைகள் வெகு சுலபம்தான்
வலியென்ற வாய் இல்லா விடில்...//

அடடே...ஆழமான வரிகள்...யோசிக்கும்போது கொஞ்சம் வலிக்கவும் செய்கிறது...
நிச்சயம் வெற்றிதான்......
நானெல்லாம் பாடம் கற்கவேண்டும்..உங்களிடம்......
வாழ்த்துகள்....

சந்தான சங்கர் said...

விழாவுக்கென வெட்டப்பட்ட குலைவாழை
மடிந்திருக்கிறாள்
பூப்பெய்திய பெண் ஒருத்தி....//

அருமைங்க
நல்லா சொல்லி இருக்கீங்க..

வாழ்த்துக்கள்..

Ashok D said...

நீங்கள் பிடுங்கி நட்ட நாற்றில்
ஒரு புணர்ச்சி பிரிந்திருக்கலாம்..

:)

அரங்கப்பெருமாள் said...

தாவரத்தின் மேல் இவ்வளவு பாசமா? ஆத்மார்த்தமான வரிகள். மிக அருமை.

Mohan said...

கவிதை (100)ரொம்ப நல்லாயிருக்குங்க.

"உழவன்" "Uzhavan" said...

நல்லாருக்கு கமலேஷ்ஜி.. வாழ்த்துக்கள்!
உவமைகள் அருமை.

அன்பேசிவம் said...

தலைவரே! பின்னிட்டிங்க, வாழ்த்துக்கள்.

Sakthi said...

நல்லா இருக்கு..! நண்பரே...

கமலேஷ் said...

நேசமித்திரன் சார்,
பிழையை திருத்திட்டேன்...
உங்களிடம் மட்டும் ஒரு மூன்றாவது கண் இருக்கிறது எப்போதும்...
அதுதான் மாணவனுக்கும் ஆசிரியருக்கும் உள்ள வேறுபாடு போல.
நன்றி என்னை உக்குவிக்கும் அனைவருக்கும்...

அவனி அரவிந்தன் said...

மனதை ஆழமாக ஊடுருவும் வரிகளை தோரணமாக்கி தொடுக்கப்பட்ட கவிதை. நெஞ்சோடு நிற்கிறது. அகல மறுக்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே !

Unknown said...

அருமையான வரிக்கோர்வைகள்.

இப்படிக்கு தேடல்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அசத்தல் கவிதை. வெற்றி பெற வாழ்த்துகள்.

PPattian said...

வெற்றி நிச்சயம்.. கவிதை அருமை.. ஒவ்வொரு வரியும்..

Senthilkumar said...

வெற்றி பெற வாழ்த்துகள்!

இராவணன் said...

ரொம்ப பிடிச்சதுங்க

பத்மா said...

ஒரு கோடி தலைமுறையும் அழியாது போனால் தாங்குமா பூமி?
வலி என்ற வாய் இல்லாமல் இங்கு மரணிக்கும் மனங்கள் எவ்வளவு தெரியுமா?
வெற்றி நிச்சயம்
வாழ்த்துக்கள்
பத்மா‌

நீச்சல்காரன் said...

நல்ல கரு நல்ல நடையில் பிரம்மித்தேன்
வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

இப்பதான் வாசித்தேன் கமலேஷ்.

கண்டிப்பா வெற்றி பெரும்.