Thursday, August 12, 2010

முயலும் உலவும் காடு.


பதிவுலகில் நான் என்னும் தொடர் பதிவிற்கு என்னை அழைத்த அப்பா ராஜாராமன், நண்பர் சீமான்கனி மற்றும் சகோதரி கயல்விழி அவர்களுக்கு நன்றி.

1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
கமலேஷ்

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
கமலேஷ்தான் உண்மையான பெயர்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?
வெகுநேரமாய் யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு
இம் மாட்டு தொழுவத்தின் கதவு திறந்தேன்.

யூதாஸுக்கு பயந்து ஓடி வந்த இயேசு
வெளியில் மூச்சிரைக்க நின்றுகொண்டிருந்தார்.

என்னவென்று நான் விசாரிக்க துவங்கிய கணம் -
தான் இவ்வுலகில் அவதரித்ததே முட்டாள்தனமென்று கூச்சலிட்டபடி
மீண்டும் மரியன்னையின் கருவறைக்குள் புகுந்து கொண்டார்.
(புரியலையில்ல, அப்படி ஒரு பிறழ்வுதான்)


4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?
சரியாபோச்சி, பிரபலப்படுத்த நான் என்னங்க இங்க பிரஷர் குக்கரா விக்கிறேன். (அநியாயமான கேள்வி பாஸ் இது)

5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
ஒவ்வொரு காகிததிற்குள்ளும் உறைந்திருக்கும்
மரத்தின் இரத்தத்தை போல்,
ஒரு இளைஞனின் கையிலிருக்கும்

சிகரெட் சூட்டு தழும்பில்
ஆழத்தில் கிடக்கும் ஒரு தாவணி போல்,
என் பெரும்பான்மையான வரிகளில்
நானே புரையோடியிருக்கிறேன்

காரணம்: ஒரே ஒரு சொல்லெடுத்து இவ் உலகை பூட்டிவிட்டு
தனியே ஒரு கவிதைக்குள் அமர்ந்து
சத்தமாய் அழவும், சிரிக்கவும், முணுமுணுக்கவும் பிடித்திருக்கிறது.


6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
இரண்டும் இல்லை.

உச்சிப்பொழுதில், காய்ந்த வயிறுடன்
செருப்பில்லாத கால்களோடு
தள்ளாடி தள்ளாடி ஒரு தண்ணீர் தொட்டி நோக்கி நகரும்
கைவிடப்பட்ட அனாதை கிழவனின் கடைசி நிமிடங்களை
நான் என்ன செய்ய ?

இறந்து போன ஒரு பறவையின் சடலத்தை
இலகுவாய் கடந்துவிட முடியாத இதயத்தை
நான் என்ன செய்ய ?

தலை கருகி, உயிர் வற்றி
வாழ்க்கை முடியப்போகும் கடைசி தருணத்தில்
நல்லெண்ணெய் இட்டு,

திரியை தூண்டிய சிறுமியை நோக்கி
நன்றி கலந்த வெளிச்சத்தோடு
கை கூப்பியபடி
எரியும்
ஒரு மாடவிளக்கை
நான் என்னதான் செய்ய?

அத்தகைய தருணங்களில் நான் செய்வது
வக்கிருந்தால் கிழவனுக்கு ஒரு பிடி சோறு,
பறவைக்கு ஒரு சொட்டு கண்ணீர்,
சிவனாகிய சிறுமிக்கி - இரு வரி கவிதை.


7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?
நான் ஒத்தப் பிள்ளை பெத்தவங்க.

8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
இரண்டும் பதிவுலகிற்கு வெளியில் உண்டு.

எண்ணை பிசுக்கு மற்றும் குங்கும வாசனை கலந்துலவும்
கலை நயமிக்க கோவில்களை காணும்போது பொறாமையும்,
தேவையில்லாமல் அங்கே உபரியாய் அமர்ந்திருக்கும்
தெய்வங்களை காணும்போது கோபமும் வருவதுண்டு.



9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?
முதல் பின்னூட்டத்தின் மூலம் கைகுலுக்கியவர் - நம்ம தலைவர் D .R .அசோக் .

நேரில் பாராட்டியது அறை நண்பன் ஸ்ரீதர்.
(இரவு பணி முடிந்து வந்து அசந்து தூங்கி கொண்டிருந்தவனை எழுப்பி பாராட்டினான். பாவிப்பய.)

10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் கூறுங்கள்.
அனைத்துமா, கூறலாமே...

என் இவ்வருட டைரியின் முதல் பக்கத்தில் கவிஞர் கார்த்திக் முருகனின்
இந்த கவிதையை எழுதி இருக்கிறேன்.இப்படி இருக்கவே ஆசையும்படுகிறேன்.


கூடடைய விரும்பாததொரு
கரும் பறவை

இரை தேடிச் செல்லும்
வழியெங்கும்
ஒற்றையடிப் பாதைகளை
பிரசவித்துச் செல்கிறது.

பூச்சரம் போல முழம் முழமாக நீண்டு கொண்டே போகும் இத் தொடர் பதிவில் நான் முடிய நினைக்கும் மல்லிகைகள்

மார்க்கண்டேயன்.
வினோத் நிலா
,

geetha
மற்றும்
hemikrish .

.

39 comments:

அகல்விளக்கு said...

பதில்களும் கவிதைகளாக...

அருமை கமலேஷ்.... :)

யாத்ரா said...

ரொம்ப கவித்துவமான பதில்கள். ரொம்ப ரசிச்சேன் கமலேஷ்.

வெங்கட் நாகராஜ் said...

ஒவ்வொரு கேள்விக்கும் உங்கள் பாணியில் கவிதைகளிலே பதில்கள். அழகிய பதில்களுக்கு நன்றி.

வெங்கட்.

Anonymous said...

kavithai thoguppaai irunthadhu pathilgal,,,,

நிலாமகள் said...

பதிவு எழுதுவது எதற்கென்ற கேள்விக்கான பதில் அற்புதம்... அழகா இருக்கு பதிவு!

Ashok D said...

பதில்களும் கவிதையாய்

நாடோடி said...

ந‌ல்ல‌ க‌வித்துவ‌மான் ப‌தில்க‌ள் க‌ம‌லேஷ்... வாழ்த்துக்க‌ள்..

rvelkannan said...

ரொம்ப நாள் ஆயிற்றே கமலேஷ், நலமா ... ?
உங்களின் கவிதைகள் இல்லையே என் கவலைப்பட்டேன்
சில பதில்கள் கவிதையாக ... நன்றி கமலேஷ் நல்லாயிருக்கு
அண்ணன் பா.ரா எழுதாமல் கடத்தலாம் என்று இருந்தேன்.
வீட்டு பாடம் எழுதியெல்லாம் நமக்கு பழக்கம் இல்லையே
(எழுதியிருந்தால் எப்பவோ உருப்புட்டு இருக்கலாம்...)
அனேகமாக நீங்கள் தான் First. நல்லாயிருக்கு நண்பரே

மார்கண்டேயன் said...

அடடா, என்னையும் கோர்துட்டீங்களே, முயற்சி செய்றேன்,

Geetha said...

பதில்கள் அனைத்தும் அழகு கமலேஷ். ரசிக்கவைத்தது .

//அத்தகைய தருணங்களில் நான் செய்வது
வக்கிருந்தால் கிழவனுக்கு ஒரு பிடி சோறு,
பறவைக்கு ஒரு சொட்டு கண்ணீர்,
சிவனாகிய சிறுமிக்கி - இரு வரி கவிதை//

//ஒரே ஒரு சொல்லெடுத்து இவ் உலகை பூட்டிவிட்டு
தனியே ஒரு கவிதைக்குள் அமர்ந்து
சத்தமாய் அழவும், சிரிக்கவும், முணுமுணுக்கவும் பிடித்திருக்கிறது//

பிடித்திருக்கிறது :)

சென்ற பதிவிற்கும், இப்பதிவிற்கும் நீண்ட இடைவெளி.....
தேடி இருந்தேன் உங்கள் கவிதையை.

Sugirtha said...

படித்தபோது ஒரு அருமையான மனிதரை சந்தித்ததான இதமான உணர்வு :)

சீமான்கனி said...

ஆஹா..கமல்ஜி உங்கள் கவிதை போலவே இதையும் மீண்டும் மீண்டும் படிக்கவைத்து விடீர்கள் பணிச்சுமை அதிகமோ பதில்களிலும் தெரியுது அருமை ரசனையான பகிர்வுக்கு நன்றி...பிறகு அழைக்கிறேன்...

Unknown said...

/உயிர் வற்றி
வாழ்க்கை முடியப்போகும்
கடைசி தருணத்தில்
நல்லெண்ணெய் இட்டு,
திரியை தூண்டிய சிறுமியை நோக்கி
நன்றி கலந்த வெளிச்சத்தோடு
கை கூப்பியபடி எறியும் ஒரு மாடவிளக்கை/

Class.

Unknown said...

//எண்ணை பிசுக்கு மற்றும் குங்கும வாசனை கலந்துலவும்
கலை நயமிக்க கோவில்களை காணும்போது பொறாமையும்,
தேவையில்லாமல் அங்கே உபரியாய் அமர்ந்திருக்கும்
தெய்வங்களை காணும்போது கோபமும் வருவதுண்டு.//

இவ் வரிகளை பாராட்ட நினைக்கும் போது
வரிகளற்ற பாளைவனமாய் குளம்பியதோ என் மனது.

வினோ said...

கமலேஷ்.. அழகு ... அருமை..

'பரிவை' சே.குமார் said...

பதில்கள கவிதைகளாக...

அருமை கமலேஷ்.

ரிஷபன் said...

ஆஹா.. கவிதை ரசமாய்.. பதில்கள்.. மிகவும் ரசித்தேன்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

நண்பா....

தங்களை பற்றி மேலும் சிறிது அறிந்துக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி...

வாழ்த்துகள் அனைத்திற்கும் (அடைந்த பெருமைக்கும், அடைய போகும் பெருமைக்கும்)...


மிக்க நன்றி தங்களின் இனிய பதிலுரைக்கு...

கயல் said...

அழகு அருமை அற்புதம்.....

மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நண்பரே!

Madumitha said...

கவிஞனின் பதில்கள் நன்று.

Chitra said...

கவிதை நடையில் கருத்துக்களை பகிர்ந்து - ---வித்தியாசமான நடையில் உள்ள பதில்கள்.

Unknown said...

mmmmmmm

:)))

hemikrish said...

//அத்தகைய தருணங்களில் நான் செய்வது
வக்கிருந்தால் கிழவனுக்கு ஒரு பிடி சோறு,
பறவைக்கு ஒரு சொட்டு கண்ணீர்,
சிவனாகிய சிறுமிக்கி - இரு வரி கவிதை.//

excellent attitude...


அழகான பதில்கள்...என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுக்கு....
என் பெயரையும் தொடுத்ததற்கு என் நன்றிகள் பல...:-)....

Thenammai Lakshmanan said...

ஒவ்வொரு காகிததிற்குள்ளும் உறைந்திருக்கும்
மரத்தின் இரத்தத்தை போல்,
ஒரு இளைஞனின் கையிலிருக்கும்
சிகரெட் சூட்டு தழும்பில்
ஆழத்தில் கிடக்கும் ஒரு தாவணி போல்,
என் பெரும்பான்மையான வரிகளில்
நானே புரையோடியிருக்கிறேன்//

பதிலகளில் தெறீக்கும் கவி நயம்.. ம்ம் அருமை கமலேஷ்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

பதில் எல்லாம் சூப்பர்..

//(புரியலையில்ல, அப்படி ஒரு பிறழ்வுதான்)// .....ரொம்ப சூப்பர்..

//சரியாபோச்சி, பிரபலப்படுத்த நான் என்னங்க இங்க பிரஷர் குக்கரா விக்கிறேன்.// ...ஹா ஹா. முடியல.. சிரிப்பா வருது..

//நான் ஒத்தப் பிள்ளை பெத்தவங்க.//// .....அழகான பதில்

கா.பழனியப்பன் said...

உங்கள பத்தி தெரிச்சுக்கிறதுக்கு
இந்த கேள்வி பதில் பதிவு உதவியது.
அடுத்த கவிதை எப்ப நண்பா ?

Priya said...

பதில்கள் அனைத்தும் அழகு!

பா.ராஜாராம் said...

நான் வாசித்த வரையில்,

இத்தொடர் பதிவில் "த பெஸ்ட் ஒன்!"

கமலேஷ்,

நீ அப்பான்னு சொல்றதும், ஸ்ரீதர், மஹா, சசி, சொல்றதும் ஒரு மாதிரியே இருக்கும். அதாவது பெருமையா!

இனி, உங்க பெருமையை சொல்லி என் பெயரை சம்பாதிச்சால் போதும்டா பயல்களா.. அவ்வளவு வசதியாக இருக்கிறது சாதாரணமாக விடும் என் மூச்சு.

கமலேஷ் said...

@அகல் விளக்கு : மிக்க நன்றி நண்பரே. வருகைக்கும் கருத்திற்கும்.

@ யாத்ரா: வாங்க யாத்ரா, மிக்க நன்றி.

@ வெங்கட் நாகராஜ் : மிக்க நன்றி நண்பரே. தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.

@ தமிழரசி : வாங்க, வாங்க மிக்க நன்றி

@ நிலாமகள் : வாங்க நிலாமகள்,
நன்றி நன்றி.

@ D.R அசோக் : வாங்க தலை, மிக்க நன்றி.

@ நாடோடி: மிக்க நன்றி நாடோடி, வருகைக்கும் கருத்திருக்கும்.

@ வேல்கண்ணன் : வாங்க கண்ணன். நீங்க எழுதாம விட்ராதீங்க.. அப்புறம் பா.ரா அப்பாகிட்ட சொல்லி உங்களை பெஞ்சில எத்த சொல்லிருவேன். நன்றி நண்பரே.

@ மார்கேண்டேயன்: தங்களின் பதிவை படிச்சேன் நண்பரே. ரொம்ப பிடிட்சிது.

@ கீதா : வாங்க தோழி, தொடர்ச்சியான வேலை பளு,அதான் அடிக்கடி எழுத வாய்க்க வில்லை, முயற்சிசெய்கிறேன் தோழி, மிக்க நன்றி தோழி.

@ சுகிர்தா : வாங்க தோழி..மிக்க நன்றி தோழி.

@ சீமாங்கனி : வாங்க நண்பா..நோம்பு முடிங்க..நிறைய பேசுவோம். நன்றி நண்பா.

@ செல்வராஜ் ஜெகதீசன் : வாங்க நண்பரே..நன்றி நண்பரே.

@ ஸ்ரீதர் : வா ஸ்ரீதர், நன்றி நண்பா. நன்றி கருத்துக்கு இல்லை. என் பிறந்த நாளை சரியா ஞாபகம் வச்சி சர்ப்ரைசா நீ இன்னைக்கி உடைச்ச பார்ட்டி பாப்புக்கும், அந்த நாத்தம் பிடிச்ச நோரை டப்பாவுக்கும், எதிர் பார்க்காத சந்தோசம் நன்றி நண்பா.


@ வினோ : மிக்க நன்றி நண்பரே

கமலேஷ் said...

@சே.குமார். : வாங்க வாங்க குமார். நன்றி நன்றி.

@ ரிஷபன் : வாங்க ரிசபன். உங்க கதையெல்லாம் நச்சின்னு இருக்கு. நன்றி நண்பரே.

@ தஞ்சை வாசன்: என்ன நண்பா எப்ப கல்யாண சாப்பாடு,நன்றி நண்பா

@ கயல் : நன்றி நன்றி நன்றி சகோதரி.

@ மதுமிதா : மிக்க நன்றி நண்பரே.

@ சித்ரா : வாங்கக்கா,,நன்றிக்கா..

@ ஆறுமுகம் முருகேசன்: நண்பா இப்படிலாம் கமென்ட் போட்ட,,,,மீண்டும் நீ சவுதி வரக் கடவாயாக..நன்றி நண்பா.

@ hemikrish : வாங்க சகோதரி, நன்றி சகோதரி. நேரம் அமையும் போது கட்டாயம் எழுதுங்க.

@ தேன்னம்மை லக்ஷ்மணன் : வாங்கக்க,, நன்றிக்கா..

@ ஆனந்தி : வாங்க வாங்க ஆனந்தி,,நன்றி தோழி.

@ க.பழனியப்பன். : அட என்னை விடுங்க நண்பரே,,நீங்க எப்ப திரும்ப எழுத போறீங்க..நன்றி நண்பரே..

@ ப்ரியா: மிக்க நன்றி தோழி...

@ பா.ராஜாராம் : உங்களை அப்பான்னு கூப்பிடறதே ஒரு சந்தோசம். அதையும் மகாவுக்கும் சசிக்கும் நடுவில் அமர்ந்து கூபிட்ரதுன்னா ரொம்ப ரொம்ப சந்தோசம். அதையும் நீங்க சொல்ல கேட்பது வேறு மாதிரியான சந்தோசம். நன்றிப்பா..நன்றிப்பா..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட..பதில்களும் இலக்கியமாய் மனதை நிறைத்தது!!

பத்மா said...

மிகவும் அழகான வெளிப்பாடு கமலேஷ் ..
சிவனாகிய சிறுமி ..கண்ணில் நிற்கிறாள் ..

visualise பண்ண வைப்பது தான் உங்கள் எழுத்தின் தனித்தன்மை

விஜய் said...

தம்பி நலமா ?

வலையுலகம் வந்து நாட்களாகி விட்டது

கவிதைகளாய் பதில்கள்

பிரமாதம்

பங்கு பா.ரா சொன்னது போல் தொடர்பதிவில் இது போல் எவையும் நெஞ்சை தொட்டதில்லை

வாழ்த்துக்கள்

விஜய்

அ.முத்து பிரகாஷ் said...

இந்த தொடர்பதிவை இதுவரை எழுதியவர்கள் எவரும் இந்த பதிவை படிக்க நேர்ந்தால் அவர்களின் ராத்தூக்கம் தள்ளிபோவது உறுதி ...

முடிவற்ற பூச்சரத்தின் என்றும் வாடாத பேரழகு ரோஜா நீங்கள் ...

GSV said...

அருமையான முனுரையோட உங்க "Blog Archive" படிக்க ஆரம்பிக்கிறேன். வாழ்த்துக்கள் !!!.

15 நிமிடம் ரசிச்சு படித்து கிடைத்த சந்தோசத்தை 1 sec சூடு எதிவிட்டுடாறு இந்த "Manima", நல்லா இருங்க.

அன்புடன் மலிக்கா said...

கவிநடையில் பதில் அருமைங்க.

அதிலும் பிரசர்குக்கர் சூப்பர்.

பாலா said...

ஆஹா அருமை

கமலேஷ் said...

@ ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி : வாங்க நண்பரே. நன்றி நண்பரே.

@ பத்மா :
வாங்க சகோதரி, தங்களின் அன்பிற்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி

@ விஜய் : வாங்கன்னே...வாங்கன்னே.. எல்லாம் உங்க ஆசிர்வாதம்ன்னே...நன்றிண்ணே.

@ நியோ :
வாங்க தோழரே, உங்களின் மிகுந்த அன்பு என்னை நெகிழ வைக்கிறது,நன்றி தோழரே.

@ மணிமாறன் :
நல்ல தொழில் விளம்பர முயற்சி நண்பரே, வந்தா கட்டாயம் போன் பன்றேன்.நன்றி

@ GSV : விடுங்க பாஸ்,பாவம் அவரோட வயத்து வலி அவருக்கு, வருகைக்கும், வாசிப்பிற்கும் நன்றி தோழரே.

@ மல்லிகா :
மிக்க நன்றி சகோதரி,கருத்திற்கும் வருகைக்கும்

@ ஸ்வேதா : ம்ம். சரிக்கா.

@ பாலா : வாங்க நண்பா, எப்படி போகுது உங்க கடல் பயணம்.

Karthik Murugan said...

தங்களது வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றி கமலேஷ். நண்பர் சேரல் வாயிலாக தங்கள் தளம் மற்றும் கவிதைகள் பற்றி அறிந்தேன்.. அருமை...! வாழ்த்துக்கள்.

கார்த்திக்.