Sunday, November 22, 2009

நானும்,என் கவிதைகளும்.....

என் கவிதைகள் -
குழந்தைகள்
இன்னும் நடை பழகாதவை,
இப்பொழுதுதான்
வரிகளின் விளிம்புகளை பிடித்துக் கொண்டு
எழுந்து நிற்க முயற்சி செய்பவை
அவை தவறி விழும் எனில்
எள்ளி நகைக்காதிர்கள்.

என் கவிதைகள் -
இன்னும் இரசம் பூசாத
கண்ணாடி ஊடகங்கள்
தெளிவான பிம்பங்களையும் கூட
சரியாக பிரதிபலிக்க தெரியாதவை
எனிலும்
உங்கள் விமர்சனங்கள் கொஞ்சம்
கடுமையானதாக இருப்பின்
அதன் மீது வீசி உடைக்காதீர்கள்.

என் கவிதைகள் -
ஓர் இரவு பாடகன்
மலிந்த வெளிச்சத்திலும்,
இரவுகளின் தெருக்களில் மட்டுமே
பாடி திரிந்தவன்.
கல்யாணி ராகத்திற்க்கும்,
முகாரி ராகத்திற்க்கும் வித்தியாசம் தெரியாத
சுத்த தன்யாசி.
என்றாலும்
இவன் சங்கீதத்திற்கு யாரும்
இரங்கல் தெரிவிக்காதிர்கள்.

- கமலேஷ் -

.

8 comments:

Ashok D said...

வாழ்த்துகள் கமலேஷ்

நிறைய படிங்க நிறைய எழுதுங்க (மூத்தோர் எனக்கு சொன்னது) :)

இரவுப்பறவை said...

வாழ்த்துக்கள்!

anujanya said...

மீண்டும் எழுத வந்ததற்கு வாழ்த்துகள். அதுவும் கவிதை என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி.

அனுஜன்யா

அன்புடன் அருணா said...

மீண்டும் எழுத்துக்கு பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள்!

கமலேஷ் said...
This comment has been removed by the author.
angel said...

kavithai patri kavithai arumai valthukal

cheena (சீனா) said...

அன்பின் கமலேஷ்

நிரையப் படியுங்க - இது தான் மூத்தவர்கள் - பிரபலங்கல் சொல்வது - படித்துப் படித்து அதில் உள்ள் சாரங்களைப் புரிந்து - தனக்கென ஒரு தனி நடை உருவாக்கிப் புகழ பெற நல்வாழ்த்துகள்

குழந்தை விரைவில் பெரியவானாவான் - கவலை வேண்டாம்

நவமபர் 22 - ஜனவர் - 11 கவிதைகள் - வாழ்க

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தோழா!

கட்டுண்டோம் பொருத்திருப்போம், காலம் மாறும் என்றிருந்தாயோ? அடைக்கப்பட்ட சூட்சமத்திற்கு விடை கண்டாயோ இப்பொழுது.

உன் பழைய குறிப்புகளுக்குள்ளும் மற்றும் மனதிற்குள்ளும் புதைந்து கிடக்கும் வார்த்தை எனும் வைரங்களை எடுத்து இங்கே பல கவிதைகளை ரசித்து ருசித்திட தந்திடு எங்களுக்கு...

காத்திருப்போம் நாங்கள் அதற்கு.