
நீ வழியனுப்பு என்று சொன்ன
அந்த ஒற்றை வரியின் கணுவில்
சிக்கி கிழிகிறதென் மனது....
இன்னும்.... இன்னும்.....
ஒரு நொடிதான்
உடைந்து விடும்
கண்ணீரோடு சேர்ந்து
உயிரின் ஒரு துளியும்...
உச்சரித்துவிட்டு உலர்ந்து விட்ட
உன் உதடுகளின் அடிவாரத்தில் அமர்ந்து
சப்தமாய் அழுகிறது என் காதல்...
தவிப்பின் விளிம்பில் தள்ளாடும்
உன் பலகீன புன்னகையின்
அர்த்தம் புரிந்த உடன்
உயிரின் வேரறுக்க தொடங்கிவிடும்
வழியென்னும் கொடுவாள்...
கடைசியாய் நீ என் கரம்பிடித்து
வரட்டுமா என்ற அழுத்ததிற்குள்தான்
உன் நினைவுகளை கட்டியணைத்த படியே
செத்து கிடக்கிறது என் உலகம்...
உன் பிரிவினை சொல்ல
உனக்கு வார்த்தை கிடைத்துவிட்டது...
ஆனால் என்தன் வலியினை சொல்ல வரிகளின்றி
இன்னும் தேடியலைகிறது இக்கவிதை....
.
Riyadh Time
19 comments:
படமும் கவிதையும் மிகப்பொருத்தம்
வாழ்த்துக்கள்
விஜய்
உச்சரித்துவிட்டு உலர்ந்து விட்ட
உன் உதடுகளின் அடிவாரத்தில் அமர்ந்து
சப்தமாய் அழுகிறது என் காதல்...
என்ன வரிகள் .. டச் பண்ணிவிட்டீரகள்
பிரிவின் வலியை அற்புதமாக படம் பிடித்து
கண்முன் காட்டிய கவி வரிகள் அழகு .....
//இன்னும்.... இன்னும்.....
ஒரு நொடிதான்
உடைந்து விடும்
கண்ணீரோடு சேர்ந்து
உயிரின் ஒரு துளியும்...//
அடடா ஆழமான வரிகள்...
//உச்சரித்துவிட்டு உலர்ந்து விட்ட
உன் உதடுகளின் அடிவாரத்தில் அமர்ந்து
சப்தமாய் அழுகிறது என் காதல்...//
மனதும் தான்...
பிரியமான பிரிவின் வலி...
அருமை கவிதை அழகாய் வந்திருக்கு...
வாழ்த்துகள்....வணக்கம்
//உன் நினைவுகளை கட்டியணைத்த படியே
செத்து கிடக்கிறது என் உலகம்...//
பலே...! அனைத்தும் அருமை கமலேஷ்..!
கமலேஷ்...கைய கொடுப்பா கை குலுக்க. ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க.வாழ்த்துக்கள்.
உன் பிரிவினை சொல்ல
உனக்கு வார்த்தை கிடைத்துவிட்டது...
ஆனால் என்தன் வலியினை சொல்ல வரிகளின்றி
இன்னும் தேடியலைகிறது இக்கவிதை....
அருமை..
என்தன் வலியினை சொல்ல வரிகளின்றி
இன்னும் தேடியலைகிறது இக்கவிதை....
very nice
பிரிவின் வலியை வடித்துள்ளீர்கள்...
ஆழமான கவிதை...
கடைசியாய் நீ என் கரம்பிடித்து
வரட்டுமா என்ற அழுத்ததிற்குள்தான்
உன் நினைவுகளை கட்டியணைத்த படியே
செத்து கிடக்கிறது என் உலகம்...
WOW...அருமை.
//கடைசியாய் நீ என் கரம்பிடித்து
வரட்டுமா என்ற அழுத்ததிற்குள்தான்
உன் நினைவுகளை கட்டியணைத்த படியே
செத்து கிடக்கிறது என் உலகம்...
//
மிகப்பிடித்தவரிகள் வாழ்த்துக்கள் தோழா...
palasa kilappurathe ivanka velaya pochu.ini konja neram namakku oru velaiyum odaathu....
உன் பிரிவினை சொல்ல
உனக்கு வார்த்தை கிடைத்துவிட்டது...
ஆனால் என்தன் வலியினை சொல்ல வரிகளின்றி
இன்னும் தேடியலைகிறது இக்கவிதை....
பிரிவு உண்மையில் வலி நிறைந்தது..!
நல்ல கவிதை..!
நல்ல எழுதி இருக்கிங்க பாஸ்.
மனதின் உள்ளே செல்லும் ஆழமான வரிகள்.
இது போட்டிக்கா.
என்னை ஊக்கபடுத்தும்
அணைத்து நெஞ்சங்களுக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றி..
உடைந்து உதிர்கிறது வலியின் வரிகள்..அருமை கமலேஷ்
கமலேஸ்,பிரிவின் வலியோடு உடைந்து அழுகிறது கவிதை.படமும் கூட.
அருமை கமலேஷ்.
வாழ்த்துக்கள்.
தொடருங்கள்.
பிரிவின் வலி கவிதையாய்....
Post a Comment