Monday, January 4, 2010
நீரியல் சுழற்சி...
தேங்கி கிடக்கும்
நீர் நிலை நான்
என்மீது கவிழ்ந்து படுக்கும்
சூரியனின் கதிர்வீச்சு நீ -
தொடங்கியது ஆவியாதல்.
என் இதழோடு இதழ் கவ்வி
நீ உறுஞ்சிய தேவகனத்தில்
தன்னிலை மறந்த நான்
தொலைந்து போகிறேன்
காற்றின் பெருவெளியில்.
உன் முத்தத்தில் முக்தி பெற்று
வெட்கத்தில் விலகி ஓடி நிற்கிறேன்
தூர வானத்து கார்முகிலாய்.
உன் சிதோஷன சிறு விரல்கள்
செல்லமாய் தலை வருட
தடுமாறிய என் உயிரின் பிடியிலிருந்து
நழுவி விழுகிறது மழை துளி.
நீ பிரிந்து போகும் இரவுகளை
நினைத்துக் கொண்டவள்
உன் மார்பில் முகம் புதைத்து
ஒரு பெருமழையென
குலுங்கி அழுகிறேன்.
உடைந்து சிதறும்
என் கண்ணீரின்
ஈரம் துடைக்க
ஓடி வருகிறது
உன் வெயிலின் விரல்கள் .
.
Subscribe to:
Post Comments (Atom)
36 comments:
//உன் சிதோஷன சிறு விரல்கள்
செல்லமாய் தலை வருட
தடுமாறிய என் உயிரின் பிடியிலிருந்து
நழுவி விழுகிறது மழை துளி//
:)
வாவ்....
அழகு அற்புதம்
நீர் வட்டம்
காதலில் வந்தது ரசனையாக இருக்குது...
உடைந்து சிதறும்
//என் கண்ணீரின்
ஈரம் துடைக்க
ஓடி வருகிறது
உன் வெயிலின் கரங்கள்.///
ம்ம்ம்...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அருமை அருமை கமலேஷ் அழகான வரிகள். கவி எழுத உங்களிடம் கொஞ்சம் கிளாஸ் எடுக்கவேண்டும்..
நேரம்கிடைக்கும்போது இதையும் பார்க்கவும்
http://fmailkka.blogspot.com/
//உன் சிதோஷன சிறு விரல்கள்
செல்லமாய் தலை வருட
தடுமாறிய என் உயிரின் பிடியிலிருந்து
நழுவி விழுகிறது மழை துளி.//
மிகவும் அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள் நண்பா.
உங்கள் கவிதை அருமை,..கலக்குங்க,..
பஞ்ச பூதங்கள் கவிதை காதல்
நல்லா இருக்கு கமலேஷ்...!
அடடா...அழகு கவிதை....மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது...வார்த்தை தேடுகிறேன்...வாழ்த்த...நன்றி கமல்...
அருமையானச் சிந்தித்து எழுதியுள்ளீர்கள். அருமை.
கண்கள் அறியா நிகழும்
நம் காதலின்றி அமையாது
இவ் உலகு.........அழகாக ரசிச்சு எழுதி இருக்கீங்க. மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் கவிதை.
நல்லாயிருக்கு பாஸ்..!!
//ஈரம் துடைக்க
ஓடி வருகிறது
உன் வெயிலின் விரல்கள்//
ரொம்ப நல்ல இருக்கு கமலேஷ்.
மிகுந்த கற்பனை வளமும், சொற்களின் லாவகமும்,சிக்கனமும் உங்கள் கவிதை நல்ல வாசிப்பு அனுபவத்தை கொடுக்கிறது.
வாழ்த்துக்கள்
கவிதை ரொம்ப நல்லா இருந்ததுங்க!
நல்ல அழுத்தமான எழுத்துக்கள்.,நல்லாருக்கு மாம்ஸ் :)
அருமையாய் இருக்கு கமலேஷ்
கவிதை ரொம்ப நல்லா இருக்கு கமலேஷ் !
மற்றொரு மழையின் கதை கவிதை!
ரொம்ப நல்லா இருக்கு கமலேஷ்.. பஞ்ச பூதங்களையும் சேர்த்து எழுதியது அருமை..
அழகான கவிதை.
மழை பொழியும் process-ஐ ஆசிரியர் பள்ளியில்
சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
இது முற்றிலும் புதிய காதல் மழை process.
மற்றுமொறு மனதில் நிற்க்கும் படியான படைப்பு.
//உன் முத்தத்தில் முக்தி பெற்று
வெட்கத்தில் ஓடி நின்று கொள்கிறேன்
தூர வானத்து கார்முகிலாய்.//
nandraaga irukkirathu
அட்டகாசம்
வாழ்த்துக்கள்
விஜய்
அருமையான கற்பனை. அழகான கவிதை.
நீரின்றி அமையாது உலகு.. என்று தான்
கேள்விப் பட்டிருக்கிறேன். காதலின்றி
அமையாது உலகு... சூப்பர்.
வாழ்த்துக்கள்....
அன்புடன் ஆர்.ஆர்.
உடைந்து சிதறும்
என் கண்ணீரின்
ஈரம் துடைக்க
ஓடி வருகிறது
உன் வெயிலின் விரல்கள்
உணர்வின் வெப்பம் சுடுகிறது..அருமை.
எங்கிருந்து வார்த்தைகளை பிடிப்பிங்க
நல்லா இருக்கு கமலேஷ்
ரொம்ப பிடிச்சிருக்கு கமலேஷ்!
ஆழமான காதல் துளி கமலேஸ்.அருமை.
உடைந்து சிதறும்
என் கண்ணீரின்
ஈரம் துடைக்க
ஓடி வருகிறது
உன் வெயிலின் விரல்கள் .//
super..::)))
நல்லாயிருக்கு நண்பா...0535073184 ஒரு Missed call கொடுங்க..பேசலாம்...
//தேங்கி கிடக்கும்
நீர் நிலை நான்
என்மீது கவிழ்ந்து படுக்கும்
சூரியனின் கதிர்வீச்சு நீ -
தொடங்கியது ஆவியாதல்.//
கமலேஷ்,
தொடக்க பத்தியிலேயே தொலைந்து போய் விட்டேன், ரசிகனாய்.
அழகு.
nalla rasanaiyil miga alagaai oru kaaviyam..
neenga yen uraiyaadal competitionla participate pannala??
oru velai judge-oh??????? :)
ella poemsum alaga arumaiya irukku..
vaalthugal..
அற்புதமான வரிகள்
அழகிய கவிதை நடை வாழ்த்துகள்
கவிதைகளுக்கு அழகு வார்த்தைகள்…அருமையான வார்த்தைகளும் அழகான பிரயோகங்களும்….:)) வாழ்த்துகள்
மிக மிக நல்லாயிருக்குங்க.... தங்களுக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்
வலை நண்பர்கள் அனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்...
Post a Comment