Monday, July 5, 2010

தோற்றப் பிழை.

வேட்டைக்கு வந்த நீங்கள்
மானோ, புலியோ
எதுவும் கிடைக்காத பட்சத்தில்
கனத்த மவுனத்தோடு திரும்பியிருக்கலாம்.

வெறுங்கையோடு திரும்பும்
வேட்டைக்காரனின் கெளரவம் குறித்து
யோசிக்கும் உங்கள் கண்கள்
அதோ ஓர் பறவை என்றதும்
குதூகலிக்கிறீர்கள்

உங்களின் சின்ட்ரெல்லா பொம்மைக்கென
என் சிறகுகளை பிய்த்துக் கொள்கிறீர்கள்.

உங்கள் தொட்டி மீனின்
இரைக்கு உதவுமென
நீலம் பாரித்த என் கண்களை
பிடுங்கி கொள்கிறீர்கள்.

என் கூடு அமைந்திருக்கும் கிளை
மகனின் கவன் வில்லுக்கு
சரியான கவட்டையென
உங்களின் கோடாரி முடிவெடுக்கிறது.

உங்களின் செய்கைகள் எதையும்
நான் தடுக்காதது குறித்து
ஆச்சர்யமாய் யோசிக்கிறீர்கள்

பின்
கோபமாய் அந்த கிளையை
வெட்டி வீழ்த்துகிறீர்கள்.
என்னை திரும்பி பார்க்கிறீர்கள்.

நான் பாடிக் கொண்டிருக்கிறேன்.

ஒரு பறவைக்கு இத்தனை திமிராயென்று
என்னை தரையோடு தேய்த்துவிடும்
நோக்கத்தில்
உங்களின் பாதங்கள் நெருங்குகின்றன.

இப்போதும் உங்களை நான்
தடுக்கும் உத்தேசமில்லை

ஏனென்றால்...

நான் பறவை இல்லை.

.

40 comments:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அருமை எப்பொழுதுதான் புரிந்துகொள்ளபோகிறோம் மரங்களின் உணர்வுகளையும் , பயன்களையும் . பகிர்வுக்கு நன்றி நண்பரே

விஜய் said...

அற்புதம் தம்பி

வாழ்த்துக்கள்

விஜய்

seemangani said...

அருமை கமல்ஜி...காட்டுக் குருவியின் கனத்த கவிதை...ரசித்தேன்...வாழ்த்துகள்..

Chitra said...

அழகு படுத்த அழகை சிதைத்து விடுகிறோம்...... ம்ம்ம்ம்.....

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

கவிதை ரொம்ப நல்லாருக்கு.

வினோ said...

அருமை நண்பரே...இயற்கை அழிக்கும் வெறித்தனம் மறையாது...

ஆறுமுகம் முருகேசன் said...

அட்டகாசம் நண்பா, வேட்டையில் சரியான தீனி கிடைத்தது..
:)

ஹேமா said...

"சுயம் தேடும் பறவை"தானே.
அதான் இத்தனை கோபம் !

பா.ராஜாராம் said...

அபாரம் கமலேஷ்!!!

சொட, சொடவென சொடக்கு பறிக்க ப்ரியம் மகனே.

hemikrish said...

உணர்வு கவிதை..."தோற்றப் பிழை "அட்டகாசமான தலைப்பு..
தொடருங்கள் .....:)

நாடோடி said...

க‌விதை ந‌ல்லா இருக்கு க‌ம‌லேஷ்...

Ananthi said...

ரொம்ப அருமையான வரிகள், கமலேஷ்..
வாழ்த்துக்கள்..

உயிரோடை said...

கவிதை நன்றாக இருக்கின்றது கமலேஷ்

Geetha said...

அருமை !

அடிக்கடி எழுதுங்கள் கமலேஷ்.

வி.பாலகுமார் said...

அருமை.

சே.குமார் said...

கவிதை...ரசித்தேன்...

D.R.Ashok said...

நல்லாயிருக்கு கமலேஷ் :)

வழிப்போக்கன் said...

அருமை

கலாநேசன் said...

நல்லா இருக்குங்க....

சுந்தர்ஜி said...

கடைசி வரி கவிதையைத் தூக்கி உச்சாணிக்கொம்பில் ஏற்றுகிறது.பறவையைப் பற்றி மட்டுமல்ல இக்கவிதை. சரிதானே கமலேஷ்?

பத்மா said...
This comment has been removed by the author.
பத்மா said...

கடைசி வரி படிக்கும் போது மனம் நடுங்குகிறது கமலேஷ் ..
இன்னதென்று நாம் நினைத்ததொன்று அது இல்லையென ஆர்ப்பரிப்பது மிக பலவீனமான தருணம் ..நமக்கு.....
தோற்றப்பிழை சரியான தலைப்பு

hemikrish said...

nan anuppiya comment kanom....

hemikrish said...

அட்டகாசமான தலைப்பு...அருமையான உணர்வு கவிதை .....தொடர்ந்து எழுதுங்கள் :)

thenammailakshmanan said...

நம் சுயத்தில் யாராய் இருக்கிறோம் கமலேஷ்...ஹ்ம்ம்

thenammailakshmanan said...

நம் சுயத்தில் யாராய் இருக்கிறோம் கமலேஷ்...ஹ்ம்ம்

கயல் said...

ரொம்ப நல்லாயிருக்கு! வாழ்த்துக்கள்.

pinkyrose said...

kavithakal thaanae nammai suthanthiramaai pesa vaikindrana...
nice kavithai...

velkannan said...

அண்ணன் முதற்கொண்டு எல்லா நண்பர்களும் சொல்லி முடித்து விட்டார்கள். நான் சொல்ல நினைத்தை (இதற்க்கு தான் சொல்வது ...
சீக்கிரம் போ என்று )

Gowripriya said...

classic

Madumitha said...

கடைசி வரியில்
மற்றோரு கவிதை
ஆரம்பிக்கிறது கமலேஷ்.
அற்புதம்.

ரிஷபன் said...

கடைசி வரியில் புரட்டிப் போட்டு விட்டது..

நிலாரசிகன் said...

//உங்களின் சின்ட்ரெல்லா பொம்மைக்கென
என் சிறகுகளை பிய்த்துக் கொள்கிறீர்கள்.//

Awesome!!

சந்ரு said...

நல்ல கருத்துள்ள பதிவு. நன்றிகள்

Gayathri said...

அருமை சின்திக்க வைத்தது

அண்ணாமலை..!! said...

எங்களது அகச்சிந்தனைகள் ..
தங்களது தளத்தில்
வார்த்தை வரம்பெற்று
கவிதைகளாக..!

சே.குமார் said...

enna veelai athigamo...

namma valaippakkam alaik kanom.

http://www.vayalaan.blogspot.com

ராஜவம்சம் said...

ஆதங்கம் பகிர்வுக்கு நன்ற்இ.

தெருப்பாடகன் said...

கவிதை அற்புதம்

சேரல் said...

போட்டு சாத்துறீங்க!

I just loved it

-ப்ரியமுடன்
சேரல்