Tuesday, December 1, 2009

ஈடில்லா இழப்பு...



காலை எழுந்ததும் நாளிதழ் புரட்டினேன்,
இன்று இழப்பு என்றதென் ராசிபலன்....

எதையும் இழப்பதில்லையென
சூள் கொண்டேன்...

போர்களங்களின் சாலைகள் விலக்கினேன்-
அமைதியை இழந்து விடக்கூடாதென.....

கோபங்களை புன்னகையில் புதைத்தேன்-
நிதானத்தை இழந்து விடக்கூடாதென.....

வார்த்தைகளின் கையில்
பூக்களை கொடுத்தேன்-
உறவுகளை இழந்து விடக்கூடாதென...

குருட்டு வாகனங்களின்
முரட்டு சாலைகள் தவிர்த்தேன்-
உயிரை இழந்து விடக்கூடாதென...

மலை முரசு ஒன்று செய்தி தாங்கி வந்தது -
..
" கொலம்பியா விண்கலம் நடுவானில் வெடித்து சிதறியது..
கல்பனா சாவ்லா உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர் "

ஜோதிடம் ப.லி..த்...தே வி.ட்..ட...து.....
.
.
.
என் பழைய டைரி குறிப்பிலிருந்து -
பிப்ரவரி,01, 2003
கமலேஷ்.கி

18 comments:

விஜய் said...

ஆறு வருஷத்துக்கு முந்தியே இவ்வளவு வலியான அழகான கவிதையா

நெஞ்சார்ந்து வாழ்த்துகிறேன்

விஜய்

அன்பேசிவம் said...

//காலை எழுந்ததும் நாளிதழ் புரட்டினேன்,
இன்று இழப்பு என்றதென் ராசிபலன்....

எதையும் இழப்பதில்லையென
சூள் கொண்டேன்...///

(ம் ,மஞ்சள் காற்சட்டையும் அணிந்து 3ஆம் எண் பேருந்து செல்லவேண்டிய இடத்தில் உள்ள அலுவலகத்திற்கு செல்லாமல் ராசி எண் 6ஆம் எண் பேருந்தில் ஏறி எங்கேயோ இறங்கியவனின் கதையாக அல்லவா இருக்கிறது... ஹி ஹி ஹி)

எதையும் தாண்டி சாவ்லாவை இழந்தது உண்மையில் பெரிய இழப்புதான்.
ம்ம் நிச்சயம்

Ramesh said...

////கோபங்களை புன்னகையில் புதைத்தேன்-
நிதானத்தை இழந்து விடக்கூடாதென.....////

அருமை நண்பா
அப்பவே இப்படி என்றால் இப்ப எப்படி வரும்
தொடர்ந்து எழுதுங்கள்

பூங்குன்றன்.வே said...

வித்தியாசமான கவிதை...ரொம்ப ரசிக்கும்படி இருக்கு

கா.பழனியப்பன் said...

இலப்புகள் பற்றிய செய்தி கவிதை உருவில் வரும்போது
மனதை இன்னும் பாதிப்பது தவிர்க முடியாததாகிறது.

சத்ரியன் said...

//ஜோதிடம் ப.ழி..த்...தே வி.ட்..ட...து.....//

நண்பா ,

வலித்து விட்டது.

அதுசரி,

சிற்பி சிலை செதுக்கலாம். சிற்பி, சிற்பியை எப்படிச் செதுக்குவது?

கமலேஷ் said...

கருத்துரை இட்ட
விஜய்,
முரளி குமார் பத்மநாபன்,
ரமேஷ்,
பூங்குன்றன்,
பழனியப்பன்,
சத்ரியன்
அனைவருக்கும் என் நன்றி...

நேசமித்ரன் said...

பலித்து விட்டது வா?
பழித்து விட்டதுவா ?

நல்ல கவிதை முயற்சி

Paleo God said...

பரிசு இருக்கட்டும் ஒரு கவிஞர் நீங்கள் என் வலைப்பக்கம் வந்து வாசித்து வாழ்த்தியது மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

கமலேஷ் said...

மன்னிக்கணும் நேசமித்திரன்...
எழுத்து பிழை...

நன்றி..

Thenammai Lakshmanan said...

கல்பனா சாவ்லாவின் மறைவு எனக்கும் அதிர்சியைக் கொடுத்தது உண்மை

நல்லா எழுதி இருக்கீங்க கமலேஷ்

anujanya said...

நல்லா இருக்கு கமலேஷ். நேசன், யாத்ரா, மண்குதிரை இவர்களின் கவிதைகளையும் படியுங்கள். நல்ல வாசிப்பனுபவம் கிடைக்கும்.

அனுஜன்யா

PPattian said...

வலி சொல்லும் கவிதை.. நல்லா இருக்கு.. வாழ்த்துகள்

ஹேமா said...

கமலேஸ்.ஜோதிட நம்பிக்கையில் பலித்த ஒரு கவிதை.நல்ல சிந்தனை.

தமிழ் உதயம் said...

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட நினைக்கலாமா

ரிஷபன் said...

நிஜமா மனசை தொட்டது.. இழப்பு பற்றிய மனித நேய பார்வை புரிந்து ரசித்தால்.. பழிக்கிறதுன்னாலும் தப்பில்லை.. அது ஒரு வித நையாண்டி ரகம்தான்

தமிழ் said...

அருமை நண்பா

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எத்தனையோ இழப்புகள்...
எத்தனையோ ஜனிப்புகள்...
எதை,எதற்கு
முடுச்சுப் போடுவது??