Tuesday, December 8, 2009
மெய்பொருள் காண்பதறிவு......
கொடிமரத்தை பற்றியதொரு
கவிதை எழுதியிருந்தேன்.
கவிதையில்
வந்தமர்ந்த ஓர் பறவை
வெகுநேரம் எதையோ தேடிவிட்டு
பறக்கும் போது சொன்னது,
உன் மரத்தில்
பழங்களே இல்லை....
(எனக்கு பிடித்தமான கவிஞர் ஒருவரின் எழுத்துக்கள், சில தினங்களுக்கு முன் காயம்பட்ட பொழுது அவரின் நிலையிலிருந்து எழுதப்பட்ட கவிதை இது... வரிகளுக்கு சொந்தக்காரன் நான் எனிலும் படுபொருள் அவருக்கே உரித்தானது...)
-------------------------------------------------------------------------------
குரல்
பிடிப்பு தளர்ந்த
பேருந்தின் இருக்கை
வழி நெடுகிலும் பேசுகிறது
கிளியின் பாஷை..
பறவையின் மொழி
தெரியாதெனினும்
என் கவிதைக்கு
கிடைத்ததொரு குரல்...
----------------------------------------------------------------------------
கவிதையும் தருவாள்....
வார்த்தைகள் மறுதலித்து
தூக்கம் தின்று கொண்டிருந்த
கவிதையிடம் கோபமாய் கேட்டேன்.
உனக்கு என்னதான் வேணும்.????
ஊனமில்லாத உண்மை,
அழுக்கில்லாத அன்பென்றது.
"அம்மா" என்று எழுதிக்கொடுத்தேன்
அருகில் படுத்து அமைதியாய்
உறங்கிப்போனது...
.
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு கமலேஷ்..! அசத்தல்..!
ரொம்ப நல்ல கவிதைகள் கமலேஷ், ரொம்ப நன்றி நண்பா.
//அருகில் படுத்து அமைதியாய்
உறங்கிப்போனது...//
தூக்கத்தின் துணை இருந்தால் தூங்கலாம்
தூக்கமே துணையாக தூங்குவது உண்மையில் கொடுப்பினை..
இன்னும் பல பரிமாணங்களை உங்கள் கவிதைகள் தொடவேண்டும்...
வெகு அருமையான கவிதைகள்!!
//உன் மரத்தில்
பழங்களே இல்லை....//
//எழுத்துக்கள், சில தினங்களுக்கு முன் காயம்பட்ட பொழுது //
பழுத்த மரம் கல்லடிபடும் எனச் சொல்லுறாங்களே!!!
எது உண்மை?
//ஊனமில்லாத உண்மை,
அழுக்கில்லாத அன்பென்றது.
"அம்மா" என்று எழுதிக்கொடுத்தேன்//
வெகுநாட்களுக்கு முன் ஆனந்த விகடனில் வந்த கவிதை இது.எழுதியவர் பெயர் தெரியவில்லை(அவர் மன்னிக்க).
[அன்பைப் பற்றி சிறிய கவிதை எழுத சொன்னார்கள்
‘அம்மா’ என்றேன்.
கேட்டது அம்மாவானால் இன்னும் சிறிதாய் சொல்லியிருப்பேன்
‘நீ’ என…]
ரொம்ப எதார்த்தமான கவிதைகளை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க கமலேஷ்.
மெய்பொருள் காண்பதறிவு....கவிதையும் தருவாள்....
இரண்டிலும் மனம் பதிந்து நின்றது.
வாவ்...!!!
எனக்குப் பிடிச்சிருக்கு
அப்பழுக்கில்லாத அன்புக்கு அம்மா என்பது அருமை கமலேஷ்
வாழ்த்துக்கள்
நல்லா இருக்கு
//ஊனமில்லாத உண்மை,
அழுக்கில்லாத அன்பென்றது.
"அம்மா" என்று எழுதிக்கொடுத்தேன்// .......... எப்படிங்க, இப்படி கவிதையில் வார்த்தை ஜாலம் பண்றீங்க. நல்லா இருக்குங்க.
வாழ்த்துக்கள் கமலேஷ்
விஜய்
/"அம்மா" என்று எழுதிக்கொடுத்தேன்
அருகில் படுத்து அமைதியாய்
உறங்கிப்போனது...//
பிடித்த வரிகள் கமலேஷ். நல்லா எழுதறீங்க. வாழ்த்துக்கள்.
கமலேஷ் குரல் இனிமை
கவிதையும் தருவாள் மிக அழகு.
//ஊனமில்லாத உண்மை,
அழுக்கில்லாத அன்பென்றது.
"அம்மா" என்று எழுதிக்கொடுத்தேன்
அருகில் படுத்து அமைதியாய்
உறங்கிப்போனது...//
இனிய வரிகள்.
Post a Comment