உன் விழிகளை வெல்லும் கவிதையை
எழுத முடியாமல்
தோற்றுக்கொண்டே இருக்கிறது
என் தூரிகை...
தோற்றுக்கொண்டே இருக்கிறது
என் தூரிகை...
பிரகாரம் சுற்றும் சிறுமியொருத்தி
உனக்கும் அம்மனுக்கும்
வித்தியாசம் தெரியாமல்
சட்டென
உன்னை கையெடுத்து கும்பிடுவதைப் பார்த்து
கைகொட்டி சிரிக்கிறது
என் காதல்....
உனக்கும் அம்மனுக்கும்
வித்தியாசம் தெரியாமல்
சட்டென
உன்னை கையெடுத்து கும்பிடுவதைப் பார்த்து
கைகொட்டி சிரிக்கிறது
என் காதல்....
நான் அழுவதை
நீ பார்த்துவிடக்கூடாது
என்றுதான் நினைக்கிறேன் -
ஆனால் என்ன செய்ய ???
நீ என் கண்களாக அல்லவா இருக்கிறாய்...
நீ பார்த்துவிடக்கூடாது
என்றுதான் நினைக்கிறேன் -
ஆனால் என்ன செய்ய ???
நீ என் கண்களாக அல்லவா இருக்கிறாய்...
உன்மேல் உள்ள காதலின்
உச்சத்தை சொல்ல முடியாமல்
வார்த்தைகளோடு
போரிட்டுக் கொண்டிருக்கிறேன் நான்.
ஆனால் எந்த சிரத்தையுமின்றி
சொல்லிவிடுகிறாய் நீ -
உன்தன் ஆழமான
ஒற்றை பார்வையால்...
19 comments:
very nice,
also nice photos....
அட எல்லாமே நல்லாதான் இருக்குங்க.....
//பிரகாரம் சுற்றும் சிறுமியொருத்தி
உனக்கும் அம்மனுக்கும்
வித்தியாசம் தெரியாமல்
சட்டென
உன்னை கையெடுத்து கும்பிடுவதைப் பார்த்து
கைகொட்டி சிரிக்கிறது
என் காதல்...//
சூப்பர்.
//பிரகாரம் சுற்றும் சிறுமியொருத்தி
உனக்கும் அம்மனுக்கும்
வித்தியாசம் தெரியாமல்
சட்டென
உன்னை கையெடுத்து கும்பிடுவதைப் பார்த்து
கைகொட்டி சிரிக்கிறது
என் காதல்....//
அவ்வ்வ்வ்
//உன்தன் மௌனம் மட்டும்
எதையோ சப்தமாய் பேசுகிறது
என்னோடு...//
அனைத்தும் நல்ல கவிதைங்க.....
இவ்வளவு அழகான போட்டோக்கல பாத்தாபிறகு கவிதையில எப்படி concentrate பண்றது :)
நல்லாயிருக்கு கமலேஷ்
பாஸ்..இது தான் காதல் கவிதை..இந்த கவிதைகளை படிக்கும் எல்லோரும் ஒருமுறையாவது அவங்க காதலை பத்தி நினைச்சுப்பாங்க. ரொம்ப அருமை.
//எந்த சிரத்தையுமின்றி
சொல்லிவிடுகிறாய் நீ -
உன்தன் ஆழமான
ஒற்றை பார்வையால்...
//
ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க பாஸ்..!
அத்தனை கவியும் அழகு
வாழ்த்துக்கள்
அத்தனையும் அழகு...
எங்கே ?? அந்த சிறு பிள்ளை...
காணவில்லையே???
காதல் கொஞ்சும் கவிதைகள்
இதுவா சிறு பிள்ளைத்தனம். எல்லாம் பெரிய பிள்ளைத்தனம். கவிதை நன்றாக இருந்தது.
நான் அழுவதை
நீ பார்த்துவிடக்கூடாது
என்றுதான் நினைக்கிறேன் -
ஆனால் என்ன செய்ய ???
நீ என் கண்களாக அல்லவா இருக்கிறாய்... .....டீன் ஏஜ்லேயே இந்த போடா? சூப்பர்!
கவிதைகள் நன்றாக இருக்கிறது. ரசித்தேன்.
//இன்று பூத்து குலுங்கும்
என் இதயம்
நீ முத்தமிடுவதற்கு முன்
மொட்டுகளாய் இருந்ததாய் ஞாபகம்//
அருமை... அருமை... அருமை....
வேறு என்ன சொல்ல...
சரண்யாவின் போட்டோ நல்ல செலக் ஷன்.
20 வயதில் எழுதியதாக இருந்தாலும் 20:20 கிரிக்கெட் மாதிரி காதல் சிக்ஸர் இது.
வாழ்த்துக்கள்
விஜய்
நன்றி திரு. கமலேஷ்,
உங்களது கவிதைகளை இன்றுதான் படிக்க வாய்ப்பு கிடைத்தது,
நீங்கள் ரசித்தவற்றையும் பதிவேற்றியிருப்பது நல்ல நோக்கம்.
உங்கள் கவிதைகள் மிகவும் தேர்ந்த எழுத்து நடை,
உங்கள் கவிதைகளை விகடனுக்கு அனுப்பி வையுங்கள்
நிச்சயம் பிரசுரிப்பார்கள்
அன்புடன் ,
கே.ஆர்.பி.செந்தில்
கருத்திட்ட அனைவருக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்...
சரண்யாவும் கவிதைகளும் அருமை கமலேஷ்
அழகிய காதல் கவிதைகள். படங்களும் அழகு
Post a Comment