Saturday, December 19, 2009
காதலின் பக்கங்கள்...
இதுவரை காதலை பற்றி எத்தனையோ கவிஞர்கள் எழுதி தீர்ந்த போதிலும் இன்னும் பல கோடி பக்கங்கள் வெறுமையாய்...அத்தகைய காகிதங்களின் வெற்று உடல்களுக்கு என்னிடமிருந்தும் சில கவிதா சட்டைகள்...
காதலின் உலகத்தை சில வரிகளுக்குள் அடக்கிவிட முடியாதுதான் என்றாலும் தலைக்கு மேல் இருக்கும் சில சொற்களை எக்கி பறிக்க முயலும் ஒரு குழந்தையின் முயற்சிதான் இது...
இவ்வுலகில் மார்தட்டி நின்றவையனைத்தும் தன் பொலிவை இழந்து இன்று அழுகிறது... அதில் காதல் மட்டும்தான் இன்னும் காதலாகவே நின்று சிரிக்கிறது..
வளர்ந்து வரும் நாகரீகத்தில் சருகாய் போன மானுடத்திலும் இன்னும் காதலின் பக்கங்கள் மட்டுமே ஈரம் தாங்கி நிற்கின்றன..
இதுவரை காதல் விண்டு செரிக்காத துறைகள் எதுவுமே இல்லை..
அம்பிகாபதி அமராவதி காவியங்களில் துவங்கி
காரல்மார்க்சின் தத்துவங்கள் வரை
கலை,விஞ்ஞானம்,ஆன்மிகம், வரலாறுயென
அத்தனையும் தின்று தீர்த்து விட்டன...
- இனி மிஞ்சியிருப்பது காதல் மட்டும்தான் -
மிரட்டும் கடலையும் தன் கால்களால் இறைத்து
தூர்த்து விட முனையும் வீரம் காதலில் மட்டுமே சாத்தியம்...
எங்கள் புலவனின் தெருக்களில் காதலின் பிரச்சாரங்களே சற்று வேறுதான்...
எழுந்து வா புத்தா
இவளை பார்
இப்போது ஆசை துற... - என சித்தார்தனையே சவாலுக்கு அழைக்கிறான்
காதலில் மோட்சம் பெற்ற ஒரு கவிஞன்..
உம் என்று சொல் காதலி
உனக்காய் கம்பனை கூட்டி வந்து கவி பாடுகிறேன் - என
வரலாற்றை திருப்பி இறந்தவனை எழுப்புகிறான் ஒரு காதலன்..
- அவளின்றி ஓர் அணுவும் அசையாது - என
விஞ்ஞானத்தையே வியக்க வைக்கிறான் மற்றொருவன் ...
காதல் - ஒரு கடல்
இங்கு கால்கள் கூட நனைக்க முடியாத ஒருவன்
கரையில் அழுது புரள்கிறான்..
அதில் முன்னேறிய ஒருவன் ஆனந்த குளியல் போடுகிறான்...
ஒருபுறம் அக்கடலையும் கடைந்து
அமுதம் கண்டவன் கையில் கொண்டு ஓடுகிறான்...
மறுபுறம் ஒருவன் கண்ட நஞ்சை தானே உண்டு சாகிறான்...
காதல் ஏறியவனுக்கு எவரெஸ்ட் என்றால்
இடறியவனுக்கு மிசெளரியின் பள்ளத்தாக்கு...
வசந்த வனத்தின் வாசலென்றால்
மயானத்தின் மையம்,
முன்னேற்றத்தின் முதல் படி,
மரணத்தின் கடைசி எச்சரிக்கை...
காதல் இறந்தும் வாழும்
முதல் சரித்திரம்...
இங்கு உண்பதை விட
உண்ணப்படுதல் சுகம்...
இங்கு விளக்கும் நாங்களே
விட்டில் பூச்சுகளும் நாங்களே..
எங்களில் தீபமும் உண்டு..
தீப்பந்தமும் உண்டு..
மீனுக்கிட்ட தூண்டிலில்
மீனவனே சிக்கும் விந்தையும் உண்டு...
விளங்க சொன்னால்
இங்கு
நாங்களே தச்சன்...
நாங்களே சவப்பெட்டி...
நாங்களே சடலம்...
இன்னும் வரம்புக்குட்படாத
எத்தனையோ வரையறைகள்...
- காதல் தொடரும் -
- கமலேஷ்.கி -
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
//காதல் எறியவனுக்கு எவரெஸ்ட் என்றால்
இடறியவனுக்கு மிசெளரியின் பள்ளத்தாக்கு...//
அருமை...!
நல்லா இருக்கு
//இங்கு விளக்கும் நாங்களே
விட்டில் பூச்சுகளும் நாங்களே..
எங்களில் தீபமும் உண்டு..
தீப்பந்தமும் உண்டு..//
பிடிச்சிருக்கு வாழ்த்துக்கள்
நல்லா இருக்கு கமலேஷ்
முனேற்றம் -முன்னேற்றம்
இது போன்ற பிழைகளை திருத்திக்கொள்ளுங்கள்
கவிதை சூப்பரா இருக்கு...வாழத்துக்கள்..
சங்க தலைவர் - - கமலேஷ்.கி
உறுப்பினர்கள் இத பிடிச்சவங்க எல்லாரும் ::))
பி.கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு கமலேஷ் :))
//காதல் தொடரும் -
கூடவே நானும்....//
'காதலின் பக்கங்கள்' ஆரம்பமே ரொம்ப அசத்தலா இருக்கே கமலேஷ்..
காதல் பற்றி அலசலா....தொடரட்டும்.
இங்கு உண்பதை விட
உண்ணப்படுதல் சுகம்..
என்ன ஒரு அற்புதமான வரிகள்!!
//மீனுக்கிட்ட தூண்டிலில்
மீனவனே சிக்கும் விந்தையும் உண்டு...
விளங்க சொன்னால்
நாங்களே தச்சன்...
நாங்களே சவப்பெட்டி...
நாங்களே சடலம்...//
காதலை அழகான வரிகளால் ஆழம் வரை வருடி இருக்கீங்க....வாழ்த்துகள்...
//காதல் தொடரும் -
கூடவே நானும்....//
கூடவே நாங்களும் :)
அழகாக இருக்கிறது கவிதை.
கவிதை நல்லாருக்கு.
காதலை அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.
//காதல் ஏறியவனுக்கு எவரெஸ்ட் என்றால்
இடறியவனுக்கு மிசெளரியின் பள்ளத்தாக்கு//
வார்த்தைகள் வந்து விழுகுது கமலேஷ் அற்புதம்
காதல் பாடமே எடுத்து விட்டீர்கள்.. ரசனையாய்
நன்றி ரிசபன்,
தென்மலைலக்ஷ்மணன்,
அக்பர்,அவனி அரவிந்தன்,
சீமான் கனி, அர்ரன்யநிவாஸ் ராமமூர்த்தி,
ஹேமா, பூங்குன்றன்,பலா பட்டறை,
சே.குமார், ரமேஷ், ஜோதி, ரஜீபன்,
காதலின் அழகு வரிகளில்
வாழ்த்துக்கள்
விஜய்
மிக தேர்ந்த எழுத்து நடை ...
பாராட்ட வார்த்தைகள் இல்லை ....
ஆகா அருமை
//இங்கு உண்பதை விட
உண்ணப்படுதல் சுகம்...//
அருமையான வரிகள் என்பதை விட உண்மையான வரிகள்.
சே.குமார் said... /////////அருமை...!//////////
நன்றி தோழரே...
றமேஸ்-Ramesh said... ///////பிடிச்சிருக்கு வாழ்த்துக்கள் //////////
நன்றி தோழரே...
ஜோதி said... //////நல்லா இருக்கு கமலேஷ் முனேற்றம் -முன்னேற்றம் இது போன்ற பிழைகளை திருத்திக்கொள்ளுங்கள்..//////
நன்றி ஜோதி.. பிழைகளை திருத்திவிட்டேன்...
rajeepan said... ////கவிதை சூப்பரா இருக்கு...வாழத்துக்கள்..////
உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா...
பலா பட்டறை said.../////சங்க தலைவர் - - கமலேஷ்.கி
உறுப்பினர்கள் இத பிடிச்சவங்க எல்லாரும் ::))
பி.கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு கமலேஷ் :))///////
என்ன தலை, நீங்க இருக்கும் போது வால் நான் ஆடலாமா..
பூங்குன்றன்.வே said... '////காதலின் பக்கங்கள்' ஆரம்பமே ரொம்ப அசத்தலா இருக்கே கமலேஷ்..////
அப்படியா நன்றி..நன்றி...நன்றி...
ஹேமா said... ///காதல் பற்றி அலசலா....தொடரட்டும்////.
உண்மைதான் தோழி... அலசி காய போடறதுன்னு முடிவு பண்ணிட்டேன்..
உங்களின் வருகைக்கு நன்றி..
ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said.../// என்ன ஒரு அற்புதமான வரிகள்!!///
மிக்க நன்றி தோழா...
seemangani said.../// காதலை அழகான வரிகளால் ஆழம் வரை வருடி இருக்கீங்க....வாழ்த்துகள்...///
நன்றி தோழரே...
அவனி அரவிந்தன் said..///. அழகாக இருக்கிறது கவிதை.///
நன்றி நண்பா...
அக்பர் said... ///கவிதை நல்லாருக்கு.காதலை அனுபவிச்சு எழுதியிருக்கீங்க...///.
நன்றி தோழா எழுதிட்டேன் இன்னும் அனுபவிக்க முடியல...
thenammailakshmanan said... ////வார்த்தைகள் வந்து விழுகுது கமலேஷ் அற்புதம்/////
மிக்க நன்றி தோழி...
ரிஷபன் said... /////காதல் பாடமே எடுத்து விட்டீர்கள்.. ரசனையாய்///
நன்றி ...நன்றி..தோழா...
கவிதை(கள்) said... ///காதலின் அழகு வரிகளில் வாழ்த்துக்கள்///
நன்றி தோழரே...
கே.ஆர்.பி.செந்தில் said... ////மிக தேர்ந்த எழுத்து நடை ...பாராட்ட வார்த்தைகள் இல்லை ////....
வாங்க...வாங்க... மன்னார்குடி கார அண்ணா.. உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி...
தியாவின் பேனா said...////ஆகா அருமை////
நன்றி தோழி...
அரங்கப்பெருமாள் said... ////அருமையான வரிகள் என்பதை விட உண்மையான வரிகள்.////
உங்க சைட் கல கட்டுது போல... வாழ்த்துக்கள்...
Post a Comment