ஒரு மொட்டை மாடி உறக்கத்தில்
பொத்தல் வழி உள்ளிறங்கிய கனவு
கட்டி தர தீர்மானித்தது
எனக்கொரு கவிதை...
சகல தளவாடங்களையும்
சேகரித்த கனவு
திருப்பாவையின் இறை வாழ்தொன்றை
கசிந்துருகி பாடி
தொடங்கியது கட்டுமானத்தை...
காற்றில் தளும்பும் சொற்கள்
காகிதத்தில் வழியும் வரை
பொறுமை இல்லை...
முட்டி தள்ளுகிறது
மொத்த கலனையும்...
சரிந்தோடுகிறது
இலக்கணங்கள் யாவும்...
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணியென
சிதறி போயின ஐந்தா பக்கமும்...
"கடகடவென" ஓடி ஓர்
இரட்டை கிழவியை கையில் எடுத்த கனவு
அதை லாவகமாய் பொருத்துகிறது
வரிகளுக்கிடையில்...
இன்னிசையளபெடையிலிருந்து
சில ஓசைகளை எடுத்து
கவிதையின் சுவர்களை எழுப்புகிறது...
நிலை மொழியின் ஈற்றெழுத்தும்
வரு மொழியின் முதலெழுத்தும்
இணையும் பொழுதெல்லாம்
வெட்கத்தில் கண்கள் பொத்திக் கொள்கிறது..
விசாரித்து பார்த்ததில்
பொருளிலக்கனப்படி அவை
சொற்களின் புனர்ச்சியாம்...
தனக்கு இலக்கணத்தோடு கொஞ்சம்
இங்கீதமும் தெரியுமென்று சொல்லி
சிரிக்கிறது...
அணியின் அடியில் சிக்கி கிடந்த சில
சிலேடைகளை கண்டு துணுக்குற்று
அதையே கவிதையின் கூரையாக வேய்ந்து
சொல்லுருபுகளால் இறுக்கி கட்டுகிறது...
உயரம் எட்டாத இடங்களில்
அடுக்கு தொடரை இழுத்து போட்டு
ஏறுகிறது...
வல்லினம் மிகும் இடங்களை
செல்லமாய் தலையில் குட்டுகிறது,
ஈறுகெட்ட எதிர்மறை சொற்களை
தொடையில் கிள்ளுகிறது...
ஐகார குறுக்கத்தில் ஜன்னல்
ஈற்றடியில் கதவு
மரபுத் தொடரில் படிகள் என
எல்லாம் முடிந்த களிப்பில்
தன் நெற்றியில் துளிர்த்த சில
முற்றுப்புள்ளிகளை விரல்களால்
வழித்த கனவு - அதை சுண்டுகிறது
என் உறக்கத்தின் மேல் ...
சட்டென முகத்தில் விழுந்த
துளிகளின் குளிர்ச்சியால்
திடுக்கிட்டு விழிக்கையில்...
பொட்டல் வானத்தில்
நட்சத்திரங்களாகி போயிருந்தன
சொற்கள் யாவும்...
கவிதையாக
தூரத் தொடங்கியிருந்தது
மழை..
- கமலேஷ்.கி -
.
Wednesday, December 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
31 comments:
மிக அருமை.. காமத்தை விட கொடுமையானது தோன்றியதும் வடிவு கொடுக்க முற்படும் கவி மனது... வாழ்த்துக்கள் நண்பரே ::)
அணியின் அடியில் சிக்கி கிடந்த சில
சிலேடைகளை கண்டு துணுக்குற்று
அதையே கவிதையின் கூரையாக வேய்ந்து
சொல்ருபுகளால் இறுக்கி கட்டுகிறது... ..................என்ன அருமையான வரிகள். கவிதை - ரசனையுடன் வந்திருக்கிறது.
//விசாரித்து பார்த்ததில்
பொருளிலக்கனப்படி அவை
சொற்களின் புனர்ச்சியாம்...//
/கவிதையாக
தூரத் தொடங்கியிருந்தது
மழை..//
கவிதை அசரவும்,அதிரவும் வைக்கிறது நண்பா !!!
//ஐகார குறுக்கத்தில் ஜன்னல்
ஈற்றடியில் கதவு
மரபுத் தொடரில் படிகள் என
எல்லாம் முடிந்த களிப்பில்
தன் நெற்றியில் துளிர்த்த சில
முற்றுப்புள்ளிகளை விரல்களால்
//
கமலேஷ் ரொம்ப அழகா அடுக்கடுக்கான சொற்களோட சிறப்பான கவிதை...!
ரொம்ப விபரங்களோடு இருக்கு காமேஷ் இவ்வழகான கவிதை!
ஒவ்வொரு சொற்களையும் அழகாகக் கோர்த்தெடுத்திருக்கிறீர்கள் கமலேஸ்.அருமை.வாழ்த்துகள்.
////பொட்டல் வானத்தில்
நட்சத்திரங்களாகி போயிருந்தன
சொற்கள் யாவும்...
//
கவிதையாக
தூரத் தொடங்கியிருந்தது
மழை..////
பிடிச்சிருக்குங்க...
ஒரு வேண்டுகொள்
சில எழுத்துப்பிழைகளை திருத்திக்கொள்ளுங்கோ
புரட்டி எடுக்குது. உங்களைக் கனவு, என்னைக் கவிதை.
ஐகார குறுக்கத்தில் ஜன்னல்
ஈற்றடியில் கதவு
மரபுத் தொடரில் படிகள் என
எல்லாம் முடிந்த களிப்பில்
தன் நெற்றியில் துளிர்த்த சில
முற்றுப்புள்ளிகளை விரல்களால்
ரொம்ப நல்லா இருக்கு…:)
அழகான விவரணைகளோடு அழகான கவிதை
வாழ்த்துக்கள் கமலேஷ்
//நிலை மொழியின் ஈற்றெழுத்தும்
வரு மொழியின் முதலெழுத்தும்
இணையும் பொழுதெல்லாம்
வெட்கத்தில் கண்கள் பொத்திக் கொள்கிறது..//
ரசிக்காமல் இருக்க முடியுமா???
அடடா...!
பின்னுகிறீர்கள் நண்பா ..
நீர் புலவன்...
//சட்டென முகத்தில் விழுந்த
துளிகளின் குளிர்ச்சியால்
திடுக்கிட்டு விழிக்கையில்...//
கனவா கனவில் கூட வல்லினம் மெல்லினம் ஐங்கர குறுக்கம் ம்ம் சரி
//கவிதையாக
தூரத் தொடங்கியிருந்தது
மழை..//
நனைக்கிறோம் நாங்கள் நல்ல கவிதை வாழ்த்துகள்
கவிதையெழுத இவ்வளவு விஷயமிருக்கா..கமலேஷ்
சட்டென to மழை :)
ஒரு நல்ல ஆசிரியரிடம் தமிழ் வகுப்பு படித்த்து போல் உண்ர்கிறேன்.
ஒவ்வொரு வரிகளிலும் என்னை இழ்ந்தேன்.
தமிழ் இலக்காண சொற்க்களை கேட்கும் போதே மகிழ்ச்சியாய் இருக்கிறது
ஆஹா வார்த்தைகளோடு இவளவு அழகை விளையாடி வீடு கட்டி இருகிங்க...மொத்தமாய் லைக்குகோ...வாழ்த்துகள்...
'யாப்பூ!' என்று வியக்க வைக்கிறது உங்கள் கவிதையின் யாப்பு!
வாவ்!
க க போ
அத்தனை வரிகளையும் இரசித்தேன். அருமையான வரிகள்
அனைவருக்கும் இனிய நத்தார், மற்றும் புதுவருட வாழ்த்துக்கள்
மிக மிக அருமை கமலேஷ்
ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையே எழுதலாம்
உங்கள் இந்தக் கவிதையை வைத்து...
இலக்கணம் படிக்க அருமையான வழி உங்க கவிதை
அசத்துறீங்க கமலேஷ்
அத்தனை இலக்கணத்துடனும்... கவிதை மிக அழகுங்க.... பாராட்டுக்கள்.
இவ்வளவு இலக்கணமாக வேறு எங்கும் நான் படித்ததில்லை
அழகு நண்பா
விஜய்
இலக்கணத்தோடு ஒரு கவிதையா? அருமையான கனவு.
இலக்கணங்களால் ஒரு கவிதை;
இல்லை, கனவு.
ரெண்டுமே நல்லா இருக்கு.
தோழா,
இனிய தமிழ்...
வாழ்த்துக்கள்...
வாங்க பலா பட்டறை உங்களின் வாளுதுக்களுக்கு நன்றி..
நன்றி சித்ரா அக்கா..
நண்பா பூங்குன்றா....உங்க வலைதளத்துல கவிதை கலை கட்டுது போல..
மிக்க நன்றி வசந்த்..
வாங்க ராஜாராம் அண்ணா....முதல் முறையா வந்து இருக்கீங்க...உங்கள மாதிரி கலைஞர்கள் வாழ்த்து என்னை மேலும் வளர செய்யும் நன்றி...
ரொம்ப நன்றி ஹேமா...
ரமேஷ்.. என் கண்ணுல பட்ட எல்ல பிழைகளையும் திருத்திட்டேன் வேற ஏதாவது இருந்தா சொல்லுங்க..திருதிடுறேன்...உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி....
வாங்க அரங்க பெருமாள்...உங்களோட விமர்சனம் இன்னும் நல்ல என்னை எழுத சொல்லுது...நன்றி...
மிக்க நன்றி தர்ஷி...
மிக்க நன்றி ஜோதி...
மிக்க நன்றி கலையரசன்...
வாங்க மன்னார்குடி அண்ணே....நன்றிண்ணே..நன்றிண்ணே...
முதல் வரவு லாவண்யாவுக்கு மனமார்ந்த நன்றிகள்...
வாங்க அசோக்.....உங்களின் வருகைக்கு என் நன்றி...
பழனியப்பன்...உங்களின் கருது என்னை மேலும் மேலும் உக்கபடுத்துகிறது ...நன்றி..
உங்களின் வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி சீமாங்கனி...
முரளிகுமார் பத்பநாபன்...அது க க க போ இல்ல...நன்றி உங்களின் வருகைக்கு...
மிக்க நன்றி சத்குரு...உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
நன்றி தேன் அக்கா...உங்களின் சும்மா அது சும்மா இல்ல...கலக்குது...வாழ்த்துக்கள்...
கருணாகரசு....உங்களை போன்ற கலைஞர்கள் பர்ரட்டு என்னை மேலும் ஊக்கபடுத்துகிறது...நன்றி...
நன்றி விஜய் தோழரே...உங்களின் வாழ்த்துக்களுக்கு....
u . p தர்சன் உங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி...
அம்பிகா உங்களின் முதல் வரவுக்கு என் வணக்கங்களும் நன்றிகளும்....
வாங்க வானிநாதன்....உங்களின் வருகை எனக்கு மிக்க சந்தோசம் மற்றும் நன்றி...
அருமையான வரிகள்.
இனிய தமிழ்...
கவிதை மிக அழகுங்க.... பாராட்டுக்கள்.
மிக அருமை.
அருமையான வரிகள்.
வாவ்!
நினைத்துக் கூட பார்க்க முடியாத வார்த்தை ஜாலம்.. அப்பப்பா.. அருமை
///பொட்டல் வானத்தில்
நட்சத்திரங்களாகி போயிருந்தன
சொற்கள் யாவும்...///
ஆஹா...! தமிழ் இலக்கணங்களின் அணிவகுப்பு..! நன்றாக உள்ளது கமலேஷ்.
///விசாரித்து பார்த்ததில்
பொருளிலக்கனப்படி அவை
சொற்களின் புனர்ச்சியாம்...
தனக்கு இலக்கணத்தோடு கொஞ்சம்
இங்கீதமும் தெரியுமென்று சொல்லி
சிரிக்கிறது...///
இங்கே எழுத்துப் பிழைகள் கொஞ்சம் அதிகம். கவனம் கமலேஷ். :)
(ஒரு வழிப்போக்கன் போல்....)
வாசிக்க மட்டும் வந்த என்னை
வலுக்கட்டாயமாக இழுத்துச்செல்கிறது
தங்கள் வார்த்தைகள்
இந்த கருத்துக் களத்திற்குள் .....
தமிழருக்கே உள்ள தலைவாழை பண்போடு.........
நன்றி.......
மிக அருமை.......
Post a Comment