ஆச்சர்யமாய் இருந்தது..
அவர்கள் கண்களுக்கு
நான் புலப்படவே இல்லை
அக் கூட்டத்தில்
ஒரு கழுத்தைக் கூட
திருப்பவில்லை எனது குரல்.
சில மனிதர்கள்
சில மனிதர்கள்
என் உடலை ஊடுருவி
கடந்து போகிறார்கள்.
நிறைந்து வழியும்
கடந்து போகிறார்கள்.
நிறைந்து வழியும்
அரவத்தின் மத்தியிலும்
என்னை சுற்றி மிதக்கிறது
ஒரு தனிமையின் ஏகாந்தம்.
அவர்கள் கண்களிலிருந்து நான்
மொத்தமாய் மறைந்து போயிருந்தேன்
நான் ஆவியாகி
நான் ஆவியாகி
போனேனோயென பயந்து
கண்ணாடி பார்க்கையில்
கண்ணாடி பார்க்கையில்
என் பிம்பத்தின் மீது
எழுதப்பட்டிருந்தது
தனக்கென்று
தனக்கென்று
அடையாளமில்லாதவன்
அரூபமானவனென்று' ...
.
11 comments:
நல்லாருக்கு... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள் நண்பா.
2010 சிறக்கவும் வாழ்த்துக்கள்.
அடையாளமற்றுப் போவது என்ன ஒரு கொடுமை..
நல்லா இருக்கு
ரொம்ப நல்லா இருக்கு...:)
வித்தியாசமான கற்பனை
வித்தியாசமான கற்பனை. கற்பனை தானே?
...முகவரி இல்லாதவன் கவிதை ...கவிதை அருமை நண்பரே......வாழ்த்துகள்...
சூப்பர் ஃபார்ம்ல இருக்கீங்க கமலேஷ்...
கீப் இட் அப் தோழா...!
கவிதை சூப்பர்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வித்தியசமானவைக்கு... வாழ்த்துகள்
நல்லாஇருக்கு கமலேஷ் நாமஎல்லோருமே அடையாளமற்றவர்கள்தான்
Post a Comment