எழுந்திரு தோழா,
தோல்வியொன்றும் சமுத்திரமன்று
துவண்டு போக,
நீ எழுந்து நின்றால்
அது சிறிய சாலவம்
கரங்களில் அள்ளிய வாழ்க்கை
விரல்களின் இடுக்கு வழி
ஒழுகியதென்றா கவலையுற்றாய்
நழுவிய துளிகள் மீண்டும்
உன் காலடியிலேயே விழுகுமப்பா
எழுந்திரு...
மனிதனின் பரிணாமம்
விலங்கை தோலுரித்து
உன்னை வெளிக்கொணர்ந்தது
நீ உன்னை உரித்து
என்னவென்று உணரலாம்
எழுந்திரு
நான்
இமயமாய் உயர வேண்டுமென
இறைவனிடம்
வரம் கேட்கிறாய்,
புத்தியை பூட்டி
சாவியை தொலைத்தவனே !!
இறைவன் வீணைதான் தருவான்
இசையை நீதான் மீட்டிக்கொள்ள வேண்டும்
நடக்கும் வரைதான் நதி
தன் நடையை நிறுத்திக்கொண்டால்
அது குட்டை
இங்கு விழுவதல்ல அவமானம்
விழுந்தவன் அசைவற்று போனால்
அதுதான் அவமானம்
விழுந்த உன் விரல் அசைந்தாலும் போதும்
நீ புதிதாய் பிறந்து விடுகிறாய்
எழுந்திரு
வாழ்கையை வென்றவனெல்லாம்
அதிகாலை எழுந்தவனாம்
குறித்துக் கொள் உன் படுக்கையில்
கனவுகளோடு கண்களை மூடு
குறிக்கோளோடு கண்களை திற
உன் முன் இருப்பது விளக்கா
நீ தீபம் !
முட்களின் புதரா ?
நீ தீ !!
தாகமாய் இருந்த முயற்சிகளை
சுவாசமாய் மாற்று
இதுவரை நீ கடந்து வந்தது
கள்ளிக்காடு
இனி தாண்டப் போவதோ
நெருப்பு பள்ளங்கள்
ஆனால்
சினங்கள் களைந்து
புன்னகை எனும்
சிறகுகள் தரித்துக் கொள்
தோல்விகள் உன்னை சூழ்வினும்
காற்றில் கரையும் கற்பூரம் போல
திரவமின்றி வாயுவாக
பதங்கமாகிப் பழகு
இன்று உன்னில் விழுந்த தோல்விகள்
மண்ணில் புதையுண்ட நிலக்கரி ,
காலங்களின் வயது நரைக்கும் போது
அது வைரமாகிப் போகும்.
- ( ஒரு தோல்வியின் அடிவாரத்தில் அமர்ந்து
எனக்கு நானே எழுதிக்கொண்டு
எழுந்து வந்த வரிகள் இது.
2004 பழைய டைரி குறிப்பிலிருந்து ) -
Wednesday, January 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
good. super. no word to express my thanks. its not only for defeats , its boost for all.
வென்றெழவைக்கும் கவிதை
வாழ்த்துக்கள்
விஜய்
//இதுவரை நீ கடந்து வந்தது
கள்ளிக்காடு
இனி தாண்டப் போவதோ
நெருப்பு பள்ளங்கள்///
மிகவும் மனதைக் கவர்ந்த கவிதை உங்கள் உள டயரியிலிருந்து.....
வாழ்த்துக்கள் தொடருங்கள்
மேலதிக டயரி தொகுப்பை வெளிவிடுங்கள்
கமலஷ் ஒவ்வொரு வரியும் ரசித்து படித்தேன் அத்தனை வரிகளும் புத்துணர்வை அளித்தது துள்ளி குதிக்கிறேன் இப்பொழுது
மனிதனின் பரிணாமம்
விலங்கை தோலுரித்து
உன்னை வெளிக்கொணர்ந்தது
நீ உன்னை உரித்து
என்னவென்று உணரலாம்
எழுந்திரு
இந்த வரிகள் கிளாஸிக்... சபாஷ்
//உன் முன் இருப்பது விளக்கா
நீ தீபம் !
முட்களின் புதரா ?
நீ தீ !!//
பாசிடிவ் ஆன எனர்ஜி கொடுக்கும் வரிகள் (அனைத்தும்)
தொடருங்கள். நன்றி.
refreshing... nice verses.
கரங்களில் அள்ளிய வாழ்க்கை
விரல்களின் இடுக்கு வழி
ஒழுகியதென்றா கவலையுற்றாய்
நழுவிய துளிகள் மீண்டும்
உன் காலடியிலேயே விழுகுமப்பா
எழுந்திரு...
மனிதனின் பரிணாமம்
விலங்கை தோலுரித்து
உன்னை வெளிக்கொணர்ந்தது
நீ உன்னை உரித்து
என்னவென்று உணரலாம்
எழுந்திரு
நடக்கும் வரைதான் நதி
தன் நடையை நிறுத்திக்கொண்டால்
அது குட்டை
இங்கு விழுவதல்ல அவமானம்
விழுந்தவன் அசைவற்று போனால்
அதுதான் அவமானம்
விழுந்த உன் விரல் அசைந்தாலும் போதும்
நீ புதிதாய் பிறந்து விடுகிறாய்
எழுந்திரு
இந்த வரிகளை படிக்கும் போதே உடல் சிலிர்கிறது நண்பா.. உங்கள் இந்த கவிதை எவ்வளவு நன்மை செய்துள்ளது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்.. தன்னம்பிக்கை செத்து போன எனக்கு தான் தெரியும்.. ஒரு முறை வீழ்ந்த போது சகித்து கொண்டேன்.. பின் சிறு இடைவெளிகளில் ஒவ்வொரு முறை வீழ்ந்த போதும் ஏதோ சாதிக்க தான் இவ்வளவு சோதிக்க படுகிறோம் என்று நினைத்தேன்.. கடைசியாக நான் தன்னம்பிக்கை இழந்து துவண்டு போனது 2007 ஆம் வருடம்.. அன்றிலிருந்து இன்று வரை இப்படி தான் இருக்கிறேன்.. எவ்வளவோ சோதனை அதன் பின் வந்தும் கூட நான் இழந்த நம்பிக்கை மட்டும் வர வில்லை.. மரண பயம் இருந்து கொண்டே இருக்கிறது.. உங்கள் கவிதை வரிகள் எனக்கு மருந்தாகிறது.. தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டுகிறேன் நண்பா.. நன்றி நண்பா..
//நழுவிய துளிகள் மீண்டும்
உன் காலடியிலேயே விழுகுமப்பா
எழுந்திரு...
////உன் முன் இருப்பது விளக்கா
நீ தீபம் !
முட்களின் புதரா ?
நீ தீ !!//
ஒவொரு வரிகளிலும் நம்பிக்கை புதிதாய் பிறக்குது...அருமை கமல்...
@ சரவணன் : உங்களின் வருகைக்கும் கருத்திருக்கும் நன்றி தோழரே.
@ விஜய் : நன்றி தோழரே.
@ ரமேஷ் : மிக்க நன்றி நண்பா
@ சங்கர் : உங்களின் வருகைக்கு நன்றி தோழரே
@ வசந்த் : மிக்க நன்றி நன்றி நண்பா.
@ சைவகொத்து பரோட்டா : மிக்க நன்றி நண்பரே உங்களின் வருகைக்கும் கருத்திருக்கும்
@ விதூஸ் : மிக்க நன்றி தோழி
@ திவ்யா ஹரி : நடப்பது எதுவும் நன்மைக்கே தோழி..எல்லாம் சரியாகும் நம்பிக்கையுடன் இருங்கள்.
@ சீமாங்கனி : மிக்க நன்றி நண்பா
எழுச்சி தரும் வரிகள்...
சிலிர்க்கிறது நண்பா....
தொடருங்கள் வெற்றிப் பயணங்களை...
சபாஷ்.
ஒரு எழுச்சிக் கவிதை கமலேஸ்.தோல்வி என்பது என்ன ?அடுத்தபடிக்கான ஆரம்பம்தானே.
தோல்விகள் உன்னை சூழ்வினும்
காற்றில் கரையும் கற்பூரம் போல
திரவமின்றி வாயுவாக
பதங்கமாகிப் பழகு
இன்று உன்னில் விழுந்த தோல்விகள்
மண்ணில் புதையுண்ட நிலக்கரி ,
காலங்களின் வயது நரைக்கும் போது
அது வைரமாகிப் போகும்.//
தன்னம்பிக்கை வரிகள்,
இல்லை நண்பா வைரங்கள்..
மிகவும் ரசித்துணர்ந்தேன்..
தன்னம்பிக்கை கவிதை.. வார்த்தைகள் ஒவ்வொன்றும் டானிக்..
2004 கவிதை? எவர் கிரீன்..
நழுவிய துளிகள் மீண்டும்
உன் காலடியிலேயே விழுகுமப்பா
எழுந்திரு...
மனிதனின் பரிணாமம்
விலங்கை தோலுரித்து
உன்னை வெளிக்கொணர்ந்தது
நீ உன்னை உரித்து
என்னவென்று உணரலாம்
எழுந்திரு
wow....Perfect....:) Such a superb poem i read recently...:)
//மனிதனின் பரிணாமம்
விலங்கை தோலுரித்து
உன்னை வெளிக்கொணர்ந்தது
நீ உன்னை உரித்து
என்னவென்று உணரலாம்
எழுந்திரு//
மீண்டும் விலங்காகாமல் இருந்தால் சரிதான் நண்பரே...
தன்னப்பிக்கை பிறக்கும் இக்கவிதையை கண்டால்...
நல்ல கவிதை இடுகை நண்பரே...
கமலேஷ்
இதுதான்,
தோல்விகளைப் படிக்கட்டுகளாக்கி ஏறிச் சென்று வெற்றிச் சிகரத்தைத் தொடுவதா?
ஒவ்வொரு வரியிலும் புது உணர்வு இருக்கு... நம்பிக்கை தெரியுது..
அருமை கமலேஷ்,.. ஒவ்வொரு வரியும் அற்புதம்
// வாழ்கையை வென்றவனெல்லாம்
அதிகாலை எழுந்தவனாம்
குறித்துக் கொள் உன் படுக்கையில் //
நண்பா காதல் கவிதையையே படித்து அழுத்துப்போன எனக்கு
இந்த கவிதை மிகுந்த உற்ச்சாகத்தை தருகிறது.
உங்களின் கவிதை நடை,சிந்தனை அனைத்தும் என்னை அச்சர்யப்படுத்துகிறது.
நல்ல கவிதை, சிந்தனைகள் கொடுக்க என் வாழ்த்துக்கள்
மிக மிக அருமை கமலேஷ்
நான் எழுதிய
வீழ்ந்தே கிடந்தால்! கவிதைகளை வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது
இங்கு விழுவதல்ல அவமானம்
விழுந்தவன் அசைவற்று போனால்
அதுதான் அவமானம்
சினங்கள் களைந்து
புன்னகை எனும்
சிறகுகள் தரித்துக் கொள்
தோல்விகள் உன்னை சூழ்வினும்
காற்றில் கரையும் கற்பூரம் போல
திரவமின்றி வாயுவாக
பதங்கமாகிப் பழகு
இன்று உன்னில் விழுந்த தோல்விகள்
மண்ணில் புதையுண்ட நிலக்கரி ,
காலங்களின் வயது நரைக்கும் போது
அது வைரமாகிப் போகும்.
உற்சாகம் ஏற்படுத்தும் வரிகள்
நல்லா இருக்குங்க கமலேஷ்
இசையமைத்து பாடினால் இன்னும் அதிக தாக்கம் தரும்.. அருமை..
தன்னம்பிக்கையை விதைத்த கவிதை. அருவியாய் கொட்டிய விதம் அழகு.
அருமையான கவிதைப் படைப்பு....
வாசிக்கும் ஒவ்வொரு வரியும் உள்ளே ஓர் உற்சாகச் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன !
தொடர்ந்தும் எழுதுங்கள் :)
//இன்று உன்னில் விழுந்த தோல்விகள்
மண்ணில் புதையுண்ட நிலக்கரி ,
காலங்களின் வயது நரைக்கும் போது
அது வைரமாகிப் போகும்.//
இது விஞ்ஞானம் கலந்த அருமையான உண்மை கமலேஷ்
good one!!
Post a Comment