Wednesday, February 10, 2010

சிலரின் இலக்கிய சேவைகள்...


ஆடைகளை
அவிழ்த்து போட்ட அவர்கள்
மானத்தை பற்றி
விவாதிக்க துவங்கினர்.

அவன் படைப்புக்களை
இவன் விமர்சனத்தில்
குழி தோண்டி புதைத்தான்

இவன் விமர்சனத்தை
அவன் கவிதைகளால்
எரியுட்டினான்.

சிதறி கிடந்த பூக்கள் கண்டு
நந்தவனமென்று தவறுதலாய்
நுழைந்து விட்ட
இலக்கியம்
வாசகனை அழைத்துக்கொண்டு
சுடுகாட்டிலிருந்து வெளியேறியது.

--------------------------------------------------------------------------

முற்றும்.

மயானத்தில்
பட்டாம்பூச்சி பிடிக்கும்
மகளுக்காக உதிர்கிறது
எரியும் சிதையிலிருந்து
அவன் கடைசி புன்னகை.

.

36 comments:

Chitra said...

சிதறி கிடந்த பூக்கள் கண்டு
நந்தவனமென்று தவறுதலாய்
நுழைந்து விட்ட
இலக்கியம்
வாசகனை அழைத்துக்கொண்டு
சுடுகாட்டிலிருந்து வெளியேறியது.


............ தீர்க்கமான வரிகள்.

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

தமிழ் கலை/இலக்கிய சூழலின் நிதர்சனமான தரிசனம்"சிலரின் சேவைகள்". வாழ்த்துக்கள் காமேஷ்

உயிரோடை said...

//நந்தவனமென்று தவறுதலாய்
நுழைந்து விட்ட இலக்கியம்//

நிஜ‌ம் தான்

தமிழ் உதயம் said...

தற்கால இலக்கியத்தை, இதை விட அழகாக சொல்ல முடியுமா...

Ashok D said...

இரண்டும் நன்று. இரண்டாவது மிகவும் நன்று.

சைவகொத்துப்பரோட்டா said...

அருமை, யதார்த்தமான வரிகள்.

Unknown said...

அருமை என்று ஒற்றையில் சொல்ல முடியாது அருமைஅருமைஅருமைஅருமைஅருமைஅருமைஅருமைஅருமை

PPattian said...

கவிதைகள் இரண்டுமே அருமை..

"முற்றும்" கவிதை மனதை ரொம்பவே பாதிக்கிறது

Thenammai Lakshmanan said...

//சிதறி கிடந்த பூக்கள் கண்டு
நந்தவனமென்று தவறுதலாய்
நுழைந்து விட்ட
இலக்கியம்
வாசகனை அழைத்துக்கொண்டு
சுடுகாட்டிலிருந்து வெளியேறியது//

அருமை கமலேஷ்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கவிதைகள் இரண்டுமே அருமை..

'பரிவை' சே.குமார் said...

//சிதறி கிடந்த பூக்கள் கண்டு
நந்தவனமென்று தவறுதலாய்
நுழைந்து விட்ட
இலக்கியம்
வாசகனை அழைத்துக்கொண்டு
சுடுகாட்டிலிருந்து வெளியேறியது.//

...கமலேஷ் உங்கள் கைகளில் விளையாண்டு எங்கள் எண்ணங்களை நிறைத்த வரிகள்.

ஹேமா said...

கமலேஸ் அருமை.
சுடுகாடு,பூக்கள்,இலக்கியம்,வாசகன் அதனையும் சேர்த்து இணைத்தீர்களே.அதுதான் அருமை.

அடுத்த கவிதை இன்னும் அருமை.

நிலாமதி said...

அழகான் கவிதைகள் இரண்டும். மேலும்படைக்க் வாழ்த்துக்கள்.

புலவன் புலிகேசி said...

இரண்டும் நச்..இன்னும் எழுதுங்க

க.பாலாசி said...

//இலக்கியம்
வாசகனை அழைத்துக்கொண்டு
சுடுகாட்டிலிருந்து வெளியேறியது.//

அருமைங்க... ஆமா இது யாருக்காக...

//மகளுக்காக உதிர்கிறது
எரியும் சிதையிலிருந்து
அவன் கடைசி புன்னகை.//

//மகளுக்காக உதிர்கிறது
எரியும் சிதையிலிருந்து
அவன் கடைசி புன்னகை.//

ஏக்கங்கள் மறைத்து....

ரசித்தேன்....

கயல் said...

அழகான வரிகள்!உங்களின் எல்லா கவிதையையும் வாசித்து விட்டு மவுனமாய் செல்வதுண்டு! ஏனோ பின்னூட்டமிட தூண்டியது இவ்வரிகள்!

//
சிதறி கிடந்த பூக்கள் கண்டு
நந்தவனமென்று தவறுதலாய்
நுழைந்து விட்ட
இலக்கியம்
வாசகனை அழைத்துக்கொண்டு
சுடுகாட்டிலிருந்து வெளியேறியது.
//

நல்ல கவிதை!!

விஜய் said...

இடைவெளியை அதிரடியாய் நிரப்பிவிட்டீர்கள்

இரண்டும் அழகு, அருமை

வாழ்த்துக்கள்

விஜய்

கலகன் said...

//ஆடைகளை
அவிழ்த்து போட்ட அவர்கள்
மானத்தை பற்றி
விவாதிக்க துவங்கினர்.//

சரியான சாட்டையடி....

நினைவுகளுடன் -நிகே- said...

அழகான ஆழமான வரிகள்
வாழ்த்துக்கள்

குட்டிப்பையா|Kutipaiya said...

அருமையா இருக்கு இரண்டுமே...

மகளுக்காய் உதிர்த்த கடைசி புன்னகை - touching !!!

ரிஷபன் said...

இரண்டுமே நல்லா இருக்கு

அண்ணாமலையான் said...

அழகா இருக்கு வாழ்த்துக்கள்...

திவ்யாஹரி said...

//சிதறி கிடந்த பூக்கள் கண்டு
நந்தவனமென்று தவறுதலாய்
நுழைந்து விட்ட
இலக்கியம்
வாசகனை அழைத்துக்கொண்டு
சுடுகாட்டிலிருந்து வெளியேறியது.//

அழகான வரிகள்..

அம்பிகா said...

//மகளுக்காக உதிர்கிறது
எரியும் சிதையிலிருந்து
அவன் கடைசி புன்னகை.//
அருமை.
கவிதைகள் அனைத்துமே நன்று.

சிநேகிதன் அக்பர் said...

மனதை தொட்டு செல்கின்றன அனைத்து கவிதைகளும்.

அறிவு GV said...

மிகவும் அருமை கமலேஷ்..! விமர்சனம் என்ற பெயரில் சிலர் செய்யும் தவறுகளை நன்றாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள்...!

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப அருமையா இருக்கு கமலேஷ் .

அருமையான வரிகள் , ஒவ்வொரு வரியும் உணர்வுகளை தட்டிச் செல்கின்றன .

கமலேஷ் said...

@ சித்ரா : மிக்க நன்றி தோழி..

@ஜெயமார்த்தாண்டன் : உங்களின் ஒரு மித்த கருத்திருக்கு மிக்க நன்றி தோழரே.

@உயிரோடை லாவண்யா : நன்றி தோழி

@தமிழ் உதயம் : உங்களின் உக்கதிருக்கு மிக மிக நன்றி

@ அசோக் : மிக நன்றி நண்பரே

@ சைவ கொத்து: கருத்திருக்கு நன்றி நண்பரே.

@ v.a சங்கர் : நன்றி நன்றி நன்றி நன்றி தோழா..

@புபட்டியன் : மிக்க நன்றி தோழரே.

@ தேனம்மை : மிக நன்றி தோழி

@ விதுசிக : உங்களின் வருகைக்கும் கருத்திருக்கும் மிக்க நன்றி தோழி.

@ சே.குமார் : மிக்க நன்றி தோழரே.

@ ஹேமா : மிக்க நன்றி தோழி

@நிலாமதி: உங்கள்ளின் வருகைக்கு மிக்க நன்றி தோழி

@ புலிகேசி : உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே.

@பாலாசி : அது சும்மா நண்பரே..நன்றி...

@ கயல்: ஏன் தோழி மவுனமா போறீங்க...நல்லதோ கேட்டதோ எதுவா இருந்தாலும் சொல்லலாமே...உங்களின் இந்த கருத்துரைக்கு மிக்க நன்றி தோழி.

@விஜய் : உங்களின் தொடர் உக்கதிர்க்கு மிக்க நன்றி தோழரே.

@தர்மா: மிக்க நன்றி தோழரே உங்களை வருகைக்கும் கருத்திருக்கும்

@ நிகே : உங்களின் தொடர் உக்கதிர்க்கு மிக்க நன்றி தோழரே.

@ குட்டி பையா : மிக்க நன்றி

@ ரிசபன் : நன்றி நண்பரே..

@திவ்யாஹரி : நன்றி தோழி.

@அம்பிகா : உங்களின் வருகைக்கும் கருத்திருக்கும் மிக்க நன்றி தோழி

@அக்பர் : நன்றி தோழா

@அறிவு g.v : மிக்க நன்றி தோழா

@ டார்ஜான் : உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி

rvelkannan said...

வியக்கவைக்கிறது உங்களின் படைப்பு. அதுவும் முற்றும் மிக்க அருமை
முற்றும் என்பதை விட எங்களின் நினைவுகளில் தொடரும் ...

Anonymous said...

நிதர்சணத்தை சொல்கிறது கவிதை...

//நந்தவனமென்று தவறுதலாய்
நுழைந்து விட்ட இலக்கியம்
வாசகனை அழைத்துக்கொண்டு
சுடுகாட்டிலிருந்து வெளியேறியது.//

கவிதையை பிரகாசிக்க செய்த வரிகள்...

முற்றும் என்று எழுதியிருந்தாலும் வலியை தொடங்கி வைத்தல்லவா செல்கிறது கவிதை..

ஜான் கார்த்திக் ஜெ said...

//ஆடைகளை
அவிழ்த்து போட்ட அவர்கள்
மானத்தை பற்றி
விவாதிக்க துவங்கினர்.//
சரியா சொன்னீங்க.. இப்படி தானே இப்போ இருக்கு!!

கமலேஷ் said...

@ வேல்கண்ணன்: உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி கவிஞரே..

@ தமிழரசி: உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி.

@ ஜான் கார்த்திக் : உண்மைதான் தோழரே.உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..

priyamudanprabu said...

மயானத்தில்
பட்டாம்பூச்சி பிடிக்கும்
மகளுக்காக உதிர்கிறது
எரியும் சிதையிலிருந்து
அவன் கடைசி புன்னகை.

///////
என்னாமா எழுதுரீக
வாழ்த்துக்கள் காமேஷ்

பத்மா said...

முற்றும் ஐயோடா.

ஒரு வினாடி மனதை உலுக்கி போட்டு விட்டது .படித்தவுடன் கண்ணில் நீர் பெருகியது இன்று தான்

அண்ணாமலை..!! said...

சரியா.....ன கவிதைகள்!!!!!!!!

இரா.அன்புராஜா said...

enathu kannkaLillirunthu valiyum kannire enathu sariyana pinnuttam.Hats off!