விழுதுகளிறக்கிய
ஆலமரத்தின் கதகதப்பில்
கூடியிருந்த கூட்டுப் புழுவொன்று
வண்ணத்துப் பூச்சியாகி
வனமேகியது
அதன்
பிரிவின் ஆற்றாமையில்
இடறிய ஆலமரம்
மீண்டும்
விதைக்குள் விழுந்தது.
.
Wednesday, February 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
to find yourself...first lose your self....
48 comments:
இரண்டு கவிதையும் நல்லா இருக்கு...இரண்டாவது ஒரு படி மேலே..
கமல் முதல் கவிதை ரெம்ப அருமைங்க . ரெண்டாவது என் மரமண்டைக்கு ஏறல
kavithai arumai. naanraaka vanthullathu kadavul lukku nanri.
முதல் முத்து என்றால் இரண்டாவது வைரவரிகள்...!
எத்தனையோ பெண்களை நாம் பார்த்தாலும்
காதலியின் கடைகண் பார்வையில் சறியும் ஆண்களை போல
எத்தனையோ வண்ணத்துபூச்சிக்கு உறைவிடம் தந்தவனே
அந்த ஒர்வண்ணத்துபூச்சியும் உன்னை செய்யத மாயமோ?
இந்தியாவின் வழி அஹிம்சை.
தீவிரவாத்தின் பிடியில் இந்தியாவை போன்று இரண்டாவது கவிதை...
இவன்,
தஞ்சை.வாசன்.
அய்யோ !!!
குரங்கின் கையில் -
கடவுள்
...........மக்கள், இதையும் பாத்து பழகிட்டாங்க........கவிதை நல்லா இருக்குங்க.
அருமை
நல்ல கவிதைக்கான அடையாளங்களில் ஒன்று அதிலிருந்து ஒரு சொல்லை எடுத்துவிடவோ அல்லது ஒரு புதிய சொல்லை சேர்த்து விடவோ முடியாது. "நிறையழிதல்..." அப்படியிருக்கிறது.தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்
ரெண்டுமே அருமை கமலேஷ் முதலாவது மனசைத்தொட்டது இரண்டாவது மூளையைத்தொட்டது
அருமை நண்பா...
super. :)
ஆலமரத்தின் வேதனை... பிரிந்து போன வண்ணத்துப்பூச்சி. மனதை தொட்ட கவிதை.
கடவுள், குழந்தை, குரங்கு... நிதர்சனத்தின் வெளிப்பாடு.
//சுயம் தேடும் பறவை//
உங்களோட அடையாளமே வித்தியாசமா இருக்கு. இதுதான் முதல்முறை உங்க தளத்திற்கு வருகை புரிவது. இனிமேல் தொடர்ந்து படிக்கிறேன்.
மிகவும் பிடித்திருக்கிறது நண்பா !
வாழ்த்துக்கள்
நிறையழிதல் :))))
2வது மிகவும் நல்லா இருக்கு
வாழ்த்துக்கள்
கவிதைகள் நல்லா இருக்கு
ஆலமரம், ஆல விருட்சமாய் நிற்கிறது, அருமை.
கவிதைகள் அழகோ அழகு..
கவிதைகள் நல்லா இருக்குங்க..
அதன்
பிரிவின் ஆற்றாமையில்
இடறிய ஆலமரம்
மீண்டும்
விதைக்குள்ளே விழுந்தது.
//////
கலக்கலான வரிகள்
இரண்டு கவிதையும் நல்லா இருக்கு...கலக்கல் கமல்...வாழ்த்துகள்...
@ நாடோடி : உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே.
@ மீன்துள்ளியான் : நேரமிருந்தால் இன்னுமொருமுறை கொஞ்சம் உற்றுப் பாருங்களேன்.புரிந்து விடும்.உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே.
@ மதுரை சரவணன் : நன்றி தோழரே.
@ சே.குமார் : மிக்க நன்றி தோழரே.
@ தஞ்சை ஸ்ரீ.வாசன் : உங்களின் முதல் வருகைக்கும், கருத்திருக்கும் மிக்க நன்றி நண்பரே.
@ சித்ரா : மிக்க நன்றி தோழி.
@ ரிஷபன் : மிக்க நன்றி நண்பரே.
@ ஜெயமார்த்தாண்டன்: இரண்டு வரியில நீங்க சொல்லிருக்ற விஷயம் மிக மிக அற்புதமானது.நல்ல கவிதை எப்படி இருக்கணும்னு இனிமே என்கிட்ட யாரவது கேட்டா நிச்சயமா உங்களோட வரிகளைத்தான் நான் சொல்லுவேன். உங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி தோழரே..
@ தேனம்மை: உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி தோழி.
@ அகல்விளக்கு : உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.
@ vidoosh : மிக்க நன்றி
@தமிழ்உதயம் : மிக மிக நன்றி.
@கவிதை காதலன்: உங்களின் முதல் வருகைக்கு மிக நன்றி.
@ ரமேஷ் : மிக நன்றி தோழரே..
@ உயிரோடை: மிக்க நன்றி தோழி.
@மல்லிகா : உங்களின் பதிவுகளை படித்தேன் தோழி. நல்ல அங்கீகாரம் உங்களுக்கு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள் .உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி தோழி.
@புபடியான்: கருத்திற்கு மிக்க நன்றி தோழி.
@ பிரபு:உங்களை முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.தோழரே.
@ சீமாங்கனி : வாருங்கள் தோழரே..கருத்திற்கு மிக்க நன்றி.
@ சைவகொத்து: உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே.
@ஜெனோவா : மிக்க நன்றி நண்பரே..
இரண்டு கவிதைகளுமே அருமை.இரண்டாவது சிரிக்கவும் சிந்திக்கவுமாயிருக்கு !
கவி..தை...?க..விதை....கதை.முதல் வணக்கம்.
எல்லாமே ரசிக்கத்தக்க தாக இருக்கிறது,தொடர்வோம்..
அதன்
பிரிவின் ஆற்றாமையில்
இடறிய ஆலமரம்
மீண்டும்
விதைக்குள் விழுந்தது
இது நல்லாயிருக்குங்க..
2வது கவிதை உண்மை
இரண்டு கவிதைகளும் அருமை.
கவிதை 1 கதகதப்பு
கவிதை 2 வெப்பம்.
பாராட்டுக்கள்.
இந்த ஐவரையுமே படித்து இருக்கிறேன் ஜெரி நல்ல பகிர்வு அஷோக்கின் மீன் குழம்பு கவிதையும் இட்லி கவிதையும் படித்துப் பாருங்கள் மயங்கி விடுவீர்கள்
துபாய் ராஜாவின் என்னவளே பாலகுமாரின் உரையாடல் போட்டிக்கான அப்பா கவிதை கமலேஷின் இலக்கணக் கனவு கருணாரசுவை இப்பதான் படிக்கிறேன் அவருடைய செல்லமே இந்த ஐந்தும் நான் விருப்பிப் படித்தவை ஜெரி ரொம்ப நன்றி என் சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் நிஜமாவே சிங்கங்கள்தான் congrats Kamalesh
Kamalesh plz go and read the blog VALAICHARAM..that is
http://blogintamil.blogspot.com/
u will understand...
@ ஹேமா: மிக்க நன்றி தோழி
@ தராபுரதான் : உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.
@ ஜெரி ஈசானந்தன்: உங்களின் ஊக்கதிருக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.
@தமிழரசி : மிக்க நன்றி தோழி
@மாதவி : மிக்க நன்றி தோழி
@கருணாகரசு: மிக்க நன்றி தோழரே.
@ தேனம்மை : உங்களின் தகவலுக்கும் வாழ்த்துக்களுக்கும், மிக மிக நன்றி தோழி
இரண்டு கவிதையும் அருமை நண்பா...வாழ்த்துக்கள்.
கவிதை அருமை நண்பா...வாழ்த்துக்கள்.
தோழரே!
பதின்ம பருவ நிகழ்வுகளை பதியும் தொடர்ப்திவுக்கு தாங்களை அழைக்கிறேன். அழைப்பினை ஏற்று தொடர் பதிவெழுத வேண்டுகிறேன்!
நட்புடன்
கயல்
//தேடிகிட்டே இருக்குதாம் அந்த அப்பா குருவி. //
இரண்டாம் கரு உயிர்ப்பு மிக்கது.
என்ன கமலேஷ் நம்ம பக்கமும் ஆளாக்காணோம்... உங்கள் பக்கமும் பதிவைக்காணோம் என்னாச்சு..?
என்ன கமலேஷ் நம்ம பக்கமும் ஆளாக்காணோம்... உங்கள் பக்கமும் பதிவைக்காணோம் என்னாச்சு..?
எனது மனசு தளத்தில் உங்கள் பற்றி எனது மனசின் பிரதிபலிப்பு.
படிக்க இதை கிளிக்கவும். http://vayalaan.blogspot.com/2010/03/blog-post_19.html
மனதில் உள்ளதை பின்னூட்டமாகவும் மனதை ஓட்டுக்களாகவும் அளிக்க மறக்காதீர்கள்.
நட்புடன்,
சே.குமார்.
ஏன் அடுத பதிவு போடலை கமலேஷ்..
//அதன்
பிரிவின் ஆற்றாமையில்
இடறிய ஆலமரம்
மீண்டும்
விதைக்குள் விழுந்தது.//
simply awesome kamalesh!
நறுக்கான கவிதை..!!!!!!!
நல்லா இருக்கு கமலேஷ். ஆனால், நிறைய பேர் சொல்வது போல், இது இரண்டு கவிதைகளா?
அனுஜன்யா
விழுதுகளிறக்கிய
ஆலமரத்தின் கதகதப்பில்...
என்ன ஒரு அழகிய கவிதை!
-கே.பி.ஜனா
நிறையழிதல் அருமை !
Post a Comment