Saturday, June 19, 2010

நீ தந்தவை...



உன் சிவந்த உதடு பிரித்து
நாவை வெளியில் நீட்டி
சுழற்றுகிறாய்.
பொறி தட்டிய பிரம்மன்
மையத்திலாடும் மகரந்தத்தோடு
செய்ய துவங்குகிறான்
ஒரு செம்பருத்தியை.

*
குளித்தது போதுமென்று
நீ கரையேறி விட்டாய்.
திரும்பி பார்.
உன்னை பிரிய முடியாமல்
பின்னால் ஓடி வருகிறது
நதி.

**
சுழித்துக்கொண்டோடும்
இந்த வரிகளும்,
இந்த வரிகளின் படுகையில்
படிந்து கிடக்கும் வலிகளும்,
உனக்கு சொந்தமானவை.
ஏனென்றால்
இவை
நீ தந்தவை.

.

34 comments:

Geetha said...

//மையத்திலாடும் மகரந்தத்தோடு
செய்ய துவங்குகிறான்
ஒரு செம்பருத்தியை//

அழகு.

Unknown said...

நீ தந்தவை / தர மறுப்பவை.?!

கவிதை அழகு :)

பாலா said...

அருமை நண்பா

Chitra said...

very nice. பாராட்டுக்கள்! :-)

அகல்விளக்கு said...

மிக அருமை நண்பரே....

Ashok D said...

காதல்.. காதல்.. காதல்.. காதலை மட்டுமே கண்டேன், கமலேஷ் ;)

விஜய் said...

பொறிதட்டிய பிரமன் காதல் கவிதை பொறுப்பை தருகிறான் கமலேஷிடம்

விஜய்

கயல் said...

கலக்கிட்டீங்க கமலேஷ்!

சீமான்கனி said...

//மையத்திலாடும் மகரந்தத்தோடு
செய்ய துவங்குகிறான்
ஒரு செம்பருத்தியை.//

அற்புதமான ரசனை உங்களுக்கு கமல்ஜி...அழகு...வாழ்த்துகள்...

ஹேமா said...

செம்பருத்திக் கவிதையோடு காதலும் கலக்குது கமலேஸ்.அருமை.

பா.ராஜாராம் said...

ஸ்ரீ சொல்லி தான் தெரியும்.

ரொம்ப நல்லாருக்கு கமலேஷ்!

Madumitha said...

அனைத்தும் வசீகரம் கமலேஷ்.
வரிகளும் வரிகளின் படுகையும்
ஆகப் பிரமாதமான சிந்தனை.

நாடோடி said...

வ‌ழ‌க்க‌ம் போல் காத‌ல் க‌விதை அழ‌கு..

Unknown said...

செம்பருத்தி .நதி ....நீ
நல்ல கவிதை

goma said...

இனி ,செம்பருத்திப் பூவைக் கண்ட போதெல்லாம்,
இக்கவிதைக்கு, மலர் ஆடுவதைக் காணலாம்

உயிரோடை said...

ஆஹா பாருங்க‌ இன்னோரு தபூச‌ங்கர்...

r.v.saravanan said...

கலக்கல் கமலேஷ்

குட்டிப்பையா|Kutipaiya said...

கடைசி வரிகள் அருமை கமலேஷ்..

குட்டிப்பையா|Kutipaiya said...
This comment has been removed by the author.
கமலேஷ் said...

@ கீதா : நன்றி தோழி.

@ ஆறுமுகம் முருகேசன் : நன்றி தோழா,

@ சித்ரா : நன்றி தோழி,

@ அகல் விளக்கு : மிக்க நன்றி நண்பரே,

@ அசோக் : மிக்க நன்றி அண்ணா,

@ விஜய் : அண்ணா, இது காமெடி இல்லையே..

கமலேஷ் said...

@ கயல் : நன்றி தோழி,
@ சீமான் கனி : அப்படியா, மிக்க நன்றி நண்பா,
@ ஹேமா : ரொம்ப நன்றி தோழி உங்களின் கருத்திருக்கு,
@ ராஜாராம் : ரொம்ப நன்றி பா.
@ மதுமிதா : மிக்க நன்றி தோழி,
@ நாடோடி : மிக நன்றி தோழரே,
@கே.ஆர்.பி செந்தில்: ரொம்ப நன்றி அண்ணா,
@கோமா : உங்க கருத்துரை ரொம்ப சந்தோசம் தருது நன்றி தோழி,
@ உயிரோடை:ஹா ஹா ரொம்ப நன்றி லாவண்யா அக்கா

கமலேஷ் said...

@ r .v சரவணன்: நன்றி தோழரே,

@குட்டி பையா: ரொம்ப நன்றி தோழி..

சுசி said...

அசத்தல் தான் போங்க.

செ.சரவணக்குமார் said...

ரொம்ப நல்லாயிருக்கு நண்பரே.

அன்புடன் மலிக்கா said...

//குளித்து போதுமென்று
நீ கரையேறி விட்டாய்.
திரும்பி பார்.
உன்னை பிரிய முடியாமல்
பின்னால் ஓடி வருகிறது
நதி//

சூப்பர். வரிகளில் மிளிர்கிறது ஒளி..
வாழ்த்துக்கள் தோழா..

அ.முத்து பிரகாஷ் said...

இரு புன்னகைகள் ஒரு பெருமூச்சு ...
வருகிறேன் தோழர் ...

அண்ணாமலை..!! said...

ரசனைக்காரருங்க!
அந்த ரசனைகளை
அதை வார்த்தையிலும்
அழகாக வடிக்கத்
தெரிந்திருக்கிறது உங்களுக்கு!

சுந்தர்ஜி said...

போதை நிறைந்து வழிகிறது உங்கள் மொழியில்-பெண்களின் காலங்காலமான வசீகரம் போல.சபாஷ் கமலேஷ்.

வெங்கட் நாகராஜ் said...

அற்புதமான வரிகள். செம்பருத்தியின் மகரந்தத்தின் வாசனையில் மூழ்கி விட்டேன்.

rvelkannan said...

மூன்றுமே சிறப்பு என்றாலும் இரண்டாவது வதைக்கிறது என்னை மேலும் மேலும் ..தோழர்

அன்புடன் நான் said...

கவிதை நச்ன்னு இருக்குங்க.
//உன் சிவந்த உதடு பிரித்து
நாவை வெளியில் நீட்டி
சுழற்றுகிறாய்.
பொறி தட்டிய பிரம்மன்
மையத்திலாடும் மகரந்தத்தோடு
செய்ய துவங்குகிறான்
ஒரு செம்பருத்தியை.//

இது கூடுதல் கம்பீரம்
பாராட்டுக்கள்.

ஜெனோவா said...

நீ தந்தது ;அப்புறம் திருப்பி வாங்கிக்கொண்டது !

நல்லாயிருக்கு நண்பா , நான்தான் லேட் ஆ ?

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///சுழித்துக்கொண்டோடும்
இந்த வரிகளும்,
இந்த வரிகளின் படுகையில்
படிந்து கிடக்கும் வலிகளும்,
உனக்கு சொந்தமானவை.
ஏனென்றால்
இவை
நீ தந்தவை///

ரொம்ப ரொம்ப நல்லா இருக்குங்க...!!
ரசித்து படித்தேன்.. :-)))

தெருப்பாடகன் said...

" பொறி தட்டிய பிரம்மன்
மையத்திலாடும் மகரந்தத்தோடு
செய்ய துவங்குகிறான்
ஒரு செம்பருத்தியை..."

அழகிய வரிகள். வாழ்த்துக்கள்!