Wednesday, June 23, 2010

மஞ்சள் தடவிய மரணப் பத்திரிக்கை.

உன் மௌனம் பாய்ந்து
சிதைந்து போன
என் இதயத்தின் துணுக்குகளை
சேகரித்துக் கொண்டே கேட்கிறேன்.

அதற்க்கு முன்
உன் நாசியினில் ஓர்
கைக்குட்டையை கட்டிக் கொள்.

ஏனெனில்
உன்னால் காயம் பட்ட
என் சுவாசப் பைகளிலிருந்து
இரத்தத்தின் வாடை வீசக் கூடும்.

*
நரமாமிசம் தின்னும்
இந்த செவிட்டு உலகின் பிடியிலிருந்து
என்னை ரட்சிக்கும் பொருட்டு
நம் நிறை மாத சிசுவை
இரையிடுகிறேன் என்கிறாய்.

நீரிலிருந்து ஈரம் கழித்த பின்
பாவி ! மிச்சமென்னடி
இன்னும் மிச்சம்.

ஒற்றை சிறகை இழந்த பறவை
முறிந்த கிளையில் அமர்ந்து
உறைந்த முகாரியை
எத்தனை காலம் இசைக்குமென
எண்ணித் துணிந்தாயா இக் கர்மம்.

இதோ -
துடிக்க துடிக்க
என் காதலை புசிக்கிறது பார்
உன் பெரு மௌனம்.

*
சலனமற்று நீ நீட்டும்
இந்த உன் மண ஓலை
உறையிடப்பட்ட எனது கல்லறை

நடுங்கும் விரலோடு
மெல்ல மயானத்தின்
கதவுகள் திறக்கிறேன்.

அங்கே அச்சிடப்பட்டிருக்கிறது
என் மரணத்தின் தேதி.

*
இக் கவிதையின்
இறுதி ஊர்வலத்தில்
எதிரொலிக்கும் பறையோசையில்
உனக்காக நான் விட்டு போவது
ஒற்றை குறிப்பை மட்டும்தான் தோழி.

என் தீர்ப்பின் முற்றுப் புள்ளியில்
நீ ஒடித்த பேனா முனையென
உன் இமையிலிருந்து
ஒரு சொட்டுக் கண்ணீர்
எனக்காக முறியுமெனில்
உன்னை மன்னித்ததின் அடையாளமாய்
எரியும் என் சிதையிலிருந்து
பிறண்டு விழும் ஓர் விறகு.

.

43 comments:

மார்கண்டேயன் said...

வலி, உயிர் துடிக்கும் வரை உள்ள வலி . . .
யாராவது உணர்ந்து வைத்திருக்கிறார்களா நண்பா . . . ?

சிவாஜி சங்கர் said...

மிக நீண்ட துயரம்.........!!!!!!!!!

வெங்கட் நாகராஜ் said...

காதல் வலியை அப்படியே பிழிந்து எழுதி இருக்கீங்க நண்பரே. அதுவும் கடைசி வரிகள் அற்புதம்!

நாடோடி said...

க‌விதை எல்லாம் ரெம்ப‌ வ‌லிக‌ள் நிறைந்த‌தாய் இருக்கிற‌து... எல்லாம் ந‌ல்லா இருக்கு... "அச்சிட‌ப‌ட்ட‌ ம‌ர‌ண‌ தேதி" ... ம‌ன‌து க‌ன‌க்கிற‌து..

அகல்விளக்கு said...

வலிகள் சிதைக்கின்றன நண்பா...

சிதையிலிருந்து விழும் விறகு...

திருமணபத்திரிக்கையில் மரணத்தின் தேதி...

!!!!!!!

கவிதையாய் நற்சிந்தனை...

விக்னேஷ்வரி said...

வாசிக்கும் போதே வலிக்கிறது.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ம‌ன‌து க‌ன‌க்கிற‌து.. வலி . Super.
'மன ஓலை' Is it spelling mistake?

அருண் பிரசாத் said...

அருமை நண்பரே! வாழ்த்துக்கள்

Unknown said...

நரமாமிசம் தின்னும்
.
.
.
.
என் காதலை புசிக்கிறது பார்
உன் பெரு மௌனம். //

துயரத்தின் உச்சம் நண்பா.


மரணகுறிப்பு தோல்வியின் நீட்சி. :(

JEGANKUMARSP said...

Superb...

கயல் said...
This comment has been removed by the author.
ப்ரியமுடன் வசந்த் said...

//நீரிலிருந்து ஈரம் கழித்த பின்
பாவி ! மிச்சமென்னடி
இன்னும் மிச்சம்.//

இமேஜினேசன் கவிஞர்களின் உற்ற நண்பன் கவிதைகளில், அது உங்களுக்கு அருமையா அமைஞ்சிருக்கு...

Unknown said...

//நரமாமிசம் தின்னும்
இந்த செவிட்டு உலகின் பிடியிலிருந்து
என்னை ரட்சிக்கும் பொருட்டு
நம் நிறை மாத சிசுவை
இரையிடுகிறேன் என்கிறாய்.//

காதலின் உச்சகட்டம் நண்பா, கடைசி வரிகள் கண்ணீர் சிந்த வைக்கின்றன.

ஹேமா said...

காதல் கொண்ட ஒரு மனதின் ஓலம்...ஆனாலும் மன்னிக்கின்ற பக்குவம் கொண்ட காதலாய் அலறுகிறது.

Chitra said...

சலனமற்று நீ நீட்டும்
இந்த உன் மண ஓலை
உறையிடப்பட்ட எனது கல்லறை

நடுங்கும் விரலோடு
மெல்ல மயானத்தின்
கதவுகள் திறக்கிறேன்.

அங்கே அச்சிடப்பட்டிருக்கிறது
என் மரணத்தின் தேதி.


..... காதலின் வலியை சொல்லும் கவிதை.

சீமான்கனி said...

//இதோ -
துடிக்க துடிக்க
என் காதலை புசிக்கிறது பார்
உன் பெரு மௌனம்.//

//மன்னித்ததின் அடையாளமாய்
எரியும் என் சிதையிலிருந்து
பிறண்டு விழும் ஓர் விறகு//

கமல் ஜி...செம்ம்ம வலி...மயானத்தில் கூடவா அவள் மல்லிகை மணம்...வார்த்தைகள் கனத்து வரிகள் வலிக்கிறது...வலியோடு வாழ்த்துகள்...

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

தலைப்பில் ஆரமித்து ஒவ்வொரு வரியிலும் மின்னுகிறது@!.

- ஜெகதீஸ்வரன்
http://sagotharan.wordpress.com/

சுந்தர்ஜி said...

அருமை கமலேஷ்.காதலின் வலிகளைக் கடந்து வாழ்க்கை செல்கிறது.காதல் முதல் வலி. தோற்ற காதல் மிகுந்த அலைகளை எழுப்புகிறது வென்ற காதலை விட.

விஜய் said...

கருமை தடவிய உத்தரகிரியை பத்திரிகை படிப்பது போல கனக்கிறது தம்பி

விஜய்

rvelkannan said...

இந்த கவிதையை எழுதி முடிப்பதற்குள் நீங்கள் பட்ட பாடுகள் என்னால் உணர முடிகிறது.
முழுக்க முழுக்க வலிகள் நிறைந்த இந்த கவிதை கவிதையாகவே இருக்கட்டும்

Geetha said...

தலைப்பே கவிதை சொல்கிறது.

//ஒரு சொட்டுக் கண்ணீர்
எனக்காக முறியுமெனில்
உன்னை மன்னித்ததின் அடையாளமாய்
எரியும் என் சிதையிலிருந்து
பிறண்டு விழும் ஓர் விறகு//

கனக்கும் வரிகள்.
கவிதையாய் அற்புதம்.

ஜெனோவா said...

இதை இதை என்று சொல்லத்தெரியவில்லை , ஆனால் படித்த முடித்த கணத்தில் உங்களின் அருகாமையில் இருக்கப்பட வேண்டும் எனத் தோன்றியது ...

கண்ணன் சொல்லியது மாதிரி , கவிதையாகவே இருக்கட்டும் ; ஆனால் விதிக்கப்பட்டதுதானே வாழ்கையும் , கவிதைகளும் !!

இந்த வலியை, இதே நிலையிலிருந்து முழுமையாக உணரமுடிந்தது ... கடந்து போகட்டும் நண்பா !

பாலா said...

யப்பா யப்பா
என்னா வலி
"ன் சுவாசப் பைகளிலிருந்து
இரத்தத்தின் வாடை வீசக் கூடும்."

"இதோ -
துடிக்க துடிக்க
என் காதலை புசிக்கிறது பார்
உன் பெரு மௌனம்."

"எரியும் என் சிதையிலிருந்து
பிறண்டு விழும் ஓர் விறகு."

கொல்லுது அண்ணாத்த கவிதை
முடியல

வினோ said...

வலி வலி.. பிரிவின் வலி...
இதயத்தின் ரணம்....வார்த்தைகளில் வழிகிறது..

santhanakrishnan said...

இரத்தமும் கண்ணீரும்
தொட்டு எழுதிய கவிதை.
படிக்கும் போதே மனசைப்
பிழிகிறது.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//உன் இமையிலிருந்து
ஒரு சொட்டுக் கண்ணீர்
எனக்காக முறியுமெனில்
உன்னை மன்னித்ததின் அடையாளமாய்
எரியும் என் சிதையிலிருந்து
பிறண்டு விழும் ஓர் விறகு.//

மிக ஆழ்ந்த வரிகள்..!!
வரிகளில் வேதனை தெரிகிறது :-((

க.பாலாசி said...

அனைத்தும் கனமான கவிதைகள்..

அறிவு GV said...

பல மாதங்கள் யாருக்கும் பின்னூட்டம் இடாமல் இருந்த என்னை இவ்வரிகள் படித்தவுடன் பின்னூட்டமிட வைத்துவிட்டன.
வேறென்ன சொல்ல.., வலிகள் நிறைந்த காதலில் கவிதைகள் மட்டுமே நமக்கு ஆறுதல். தங்கள் காதல் மிக மிக அருமை, எழுத்து வடிவில்...!

அறிவு GV said...

பல மாதங்கள் யாருக்கும் பின்னூட்டம் இடாமல் இருந்த என்னை இவ்வரிகள் படித்தவுடன் பின்னூட்டமிட வைத்துவிட்டன. வேறென்ன சொல்ல.., வலிகள் நிறைந்த காதலில் கவிதைகள் மட்டுமே நமக்கு ஆறுதல். தங்கள் காதல் மிக மிக அருமை, எழுத்து வடிவில்...!

கமலேஷ் said...

@ மார்கண்டேயன் : சிக்கல்ல மாட்டி விடாதிங்க நண்பரே , உங்களின் வருகைக்கு மிக்க நன்றி.

@ சிவாஜி சங்கர் : நன்றி நண்பரே

@ வெங்கட் நாகராஜ் : மிக்க நன்றி நண்பரே

@ நாடோடி : தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே...

@ அகல் விளக்கு : மிக்க நன்றி நண்பரே.

@ விக்னேஸ்வரி : மிக்க நன்றி தோழி.

@ ஜெஸ்வண்டி : மிக்க நன்றி தோழி
பிழையை திருத்தி விட்டேன், கருத்திற்கு மிக்க நன்றி.

@ அருண் பிரசாத் : உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே.

@ ஆறுமுகம் முருகேசன் : நன்றி நண்பரே.

@ ஜகன் குமார் : மிக்க நன்றி தோழரே.

கமலேஷ் said...

@ ப்ரியமுடன் வசந்த் : அப்படியா!!! மிக்க நன்றி நண்பாரே..

@ ஸ்ரீதர் : வா நண்பா..எல்லாம் முதல் நாள் நீ கொடுத்த ஊக்கம்தான் காரணம்..

@ ஹேமா: மிக்க நன்றி தோழி..

@ சித்ரா : மிக்க நன்றி தோழி

@ சீமாங்கனி : வாங்க நண்பா,
ஆன்லைன்ல இப்ப ஆளை பார்க்க முடியலையே..நன்றி நண்பா..

@ ஜெகதிச்வரன் : மிக்க நன்றி தோழரே.

@ சுந்தர் ஜி : மிக்க நன்றி தோழரே.

@ விஜய் : நன்றி அண்ணா

@ வேல்கண்ணன் : உண்மைதான் நண்பரே..அந்த கற்பனை உலகத்தில் எனக்கு தேவையான சொற்க்களை தேடி திரிந்த வேலையில் நான் கொஞ்சம் பலகீனமாவதை உணர்தேன்.. மற்ற படி இது கவிதைக்கு மட்டுதான். நன்றி தோழரே.

@ கீதா ; உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி தோழி

கமலேஷ் said...

@ ஜெனோவா : அய்யய்யோ நண்பா..அதெல்லாம் ஒன்னும் இல்லை...பிரசவ வலியை கூட நம்மால் உணர முடியும் அல்லவா...அதை போலவே ஒரு முறிவை உள்ள வாங்க முயற்சி செய்தேன்..அவ்வளவே...தங்களின் கனிவான கருத்திருக்கு மிக்க நன்றி நண்பா...

@வினோ : மிக்க நன்றி நண்பரே..

@ சந்தான கிருஷ்ணன் : மிக்க நன்றி நண்பரே...

@ ஆனந்தி : மிகக் நன்றி தோழி உஞளின் கருத்திற்கு

@ பாலாசி : மிகக் நன்றி நண்பரே உங்களின் கருத்திற்கும் வரவிற்கும்

@ அறிவு : உங்களின் சபதத்தை எனக்காக தளர்த்தியதில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நண்பரே..

விஜய் said...

விருது பெற்றுகொள்ளுங்கள்

விஜய்

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு தம்பு.

அண்ணாமலை..!! said...

ஒவ்வொரு வரியும்
காதலின் பிரிவின்
வவியைப் பறைசாற்றுகின்றன!
இவ்வளவு வலி
வேண்டாம்!

Matangi Mawley said...

அருமை..

பத்மா said...

கமலேஷ் நீங்கள் எழுதவில்லையே என்று நினைத்துக்கொண்டே இருந்தேன் ..வலைத்தளம் வந்து பார்த்திருக்க வேண்டும் .முத்தான மூன்று முத்துக்களை மிஸ் பண்ணி விட்டேன் .

வலி குறித்து யோசித்தல் என்ற மறுபடி கண்டவுடன் சிறிது ஆசுவாசம் .

நீரிலிருந்து ஈரம் கழிந்ததும் ...
நெருப்பினை போல சாம்பல் கூட மிஞ்சாது இல்லை ?
அருமையான சிந்தனை
அதிலேயே பற்றி கொண்டது மனது

தவறி விழும் ஓர் மலர் ஆசிர்வதிப்பதாய் கூறுவார்கள்

பிறண்டு விழும் ஒரு விறகு எங்கள் மனதை அல்லவா பிறட்டி போடுகிறது ?
கண் ஓரம் கசிகிறது நீர் .

அன்புடன் நான் said...

யப்பா... காதல் மிரட்டுதுங்க.

'பரிவை' சே.குமார் said...

அருமையான காதல் கவிதை.

Madumitha said...

கமலேஷ் ஒரு விருது காத்திருக்கிறது
என் பக்கத்தில்.

Priya said...

வரிகள் ஒவ்வொன்றிலும் காதலும்... காதலின் வலியும் கசிகின்றது.

நிலாமகள் said...

//ஒற்றை சிறகை இழந்த பறவை
முறிந்த கிளையில் அமர்ந்து
உறைந்த முகாரியை
எத்தனை காலம் இசைக்குமென
எண்ணித் துணிந்தாயா இக் கர்மம்//அனாயசமாக வந்து விழும் சொல்லம்புகள் கிழித்துச் செல்கின்றன... தோல்வியிலும் தெறித்து நிற்கும் உக்கிரம் தகிக்கச் செய்கிறது. அருமை.

Anonymous said...

வலி மிகுந்த வரிகள்.... கவிதை அற்புதம்.